தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Lsg Vs Gt Result: யஷ் தாக்கூர் 5 விக்கெட்! பேட்டிங், பவுலிங் மாஸ் காட்டிய லக்னோ - குஜராத்துக்கு எதிராக முதல் வெற்றி

LSG vs GT Result: யஷ் தாக்கூர் 5 விக்கெட்! பேட்டிங், பவுலிங் மாஸ் காட்டிய லக்னோ - குஜராத்துக்கு எதிராக முதல் வெற்றி

Apr 08, 2024, 12:00 AM IST

google News
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரண்டு சீசன்களுக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றது. இந்த சீசனின் முதல் 5 விக்கெட்டை கைப்பற்றினார் லக்னோ பவுலர் யஷ் தாக்கூர். (AP)
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரண்டு சீசன்களுக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றது. இந்த சீசனின் முதல் 5 விக்கெட்டை கைப்பற்றினார் லக்னோ பவுலர் யஷ் தாக்கூர்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரண்டு சீசன்களுக்கு பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றது. இந்த சீசனின் முதல் 5 விக்கெட்டை கைப்பற்றினார் லக்னோ பவுலர் யஷ் தாக்கூர்.

ஐபிஎல் தொடரின் 21வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ எகானா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் லக்னோ அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும், குஜராத் அணி நான்கு போட்டிகளில் 2 வெற்றியுடன் ஏழாவது இடத்திலும் இருந்தது.

குஜராத் அணியில் முதுகு வலி காரணமாக விருத்திமான் சாஹா சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக பிஆர் ஷரத் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். கடந்த போட்டியில் விளையாடாத ஸ்பென்சர் ஜான்சனும் சேர்க்கப்பட்டார். லக்னோ அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

லக்னோ ரன்குவிப்பு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58, கேஎல் ராகுல் 33, நிக்கோலஸ் பூரான் 32 ரன்கள் எடுத்தனர். கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வந்த ஆயுஷ் பதோனி சிறிய கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ரன்கள் எடுத்தார்.

குஜராத் பவுலர்களில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

குஜராத் சேஸிங்

இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய குஜராத் சரியான பார்ட்னர்ஷிப் இல்லாமல் தவித்ததோடு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 18.5 ஓவரில் 130 ரன்களுக்கு அந்த அணி ஆல்அவுட்டானது. இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை முதல் முறையாக லக்னோ வீழ்த்தியுள்ளது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் 31 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ராகுல் திவாட்டியா 30, சுப்மன் கில் 19 ரன்கள் அடித்தார்கள்.

லக்னோ பவுலர்களில் இளம் வீரர் யஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். க்ருணால் பாண்ட்யா 3, ரவி பிஷ்னோய் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

முதலில் பேட்டிங், பின்னர் பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட லக்னோ, இந்த வெற்றியை பதிவு செய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

யஷ் தாக்கூர்

லக்னோ அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தாக்கூர் 3.5 ஓவர்கள் வீசி 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஒரு ஓவரும் மெய்டனாக வீசியிருந்தார். சுப்மன் கில், விஜய் ஷங்கர், ராகுல் திவாட்டியா, நூர் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கினார். 

அதேபோல் ஸ்பின் ஆல்ரவுண்டரான க்ருணாஸ் பாண்ட்யாவும் அற்புதமாக பவுலிங் செய்தார். 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி