தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Stephen Fleming: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரேஸில் ஸ்டீபன் பிளெமிங்! மேலும் இரண்டு முன்னாள் வீரர்கள் யார்?

Stephen Fleming: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரேஸில் ஸ்டீபன் பிளெமிங்! மேலும் இரண்டு முன்னாள் வீரர்கள் யார்?

May 15, 2024, 08:00 AM IST

google News
ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான ஹிட் லிஸ்டிஸ் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். இதேபோல் இந்த பட்டியலில் ஜஸ்டின் லேங்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் என இரண்டு முன்னாள் வீரர்களும் இருக்கிறார்கள். (PTI)
ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான ஹிட் லிஸ்டிஸ் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். இதேபோல் இந்த பட்டியலில் ஜஸ்டின் லேங்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் என இரண்டு முன்னாள் வீரர்களும் இருக்கிறார்கள்.

ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான ஹிட் லிஸ்டிஸ் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். இதேபோல் இந்த பட்டியலில் ஜஸ்டின் லேங்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண் என இரண்டு முன்னாள் வீரர்களும் இருக்கிறார்கள்.

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம் என, பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதையடுத்து தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை பயிற்யாளராக நியமிக்கலாம் என தகவல்கள் உலா வருகின்றன.

அவர் பயிற்சியாளராக நியமிக்கப்படும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் தவிர மீதமிருக்கும் 10 மாதங்கள், இந்திய கிரிக்கெட் அணியுடன் அவர் இருக்க வேண்டும்.

ராகுல் டிராவிட்டுக்கு நீடிப்பு

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் ராகுல் டிராவிட்டின் இரண்டு வருடத்துக்கான பயிற்சியாளர் ஒப்பந்தம் முடிவடைந்த போதிலும், அவரது பயிற்சி காலம் மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்பட்டன. இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விரும்பினால், ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் 11 ஆண்டுகளாக இந்திய அணிக்கு இருந்து வரும் ஐசிசி கோப்பை வறட்சி, எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியாளராக இருந்து முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

பயிற்சியாளராக நீண்ட பயணம்

டிராவிட்டுக்கு அடுத்தபடியாக ஸ்டீபன் பிளெமிங் பயிற்சியாளர் ஆகலாம் என பிரபல ஊடகங்களில் தகவல்கள் வெளியான போதிலும், சிஎஸ்கேவை விட்டு நீங்கவும், இந்திய அணியில் பயிற்சியாளராகும் விருப்பத்தையும் பிளெமிங் தெரிவிக்காமல் உள்ளார்.

2009 முதல் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இருந்து வரும் பிளெமிங், அந்த அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை பெற்று தந்துள்ளார். அத்துடன் ஐபிஎல் தொடரில் நீண்ட காலம் ஒரே அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருபவராக பிளெமிங் உள்ளார்.

டிராவிட்டுக்கு மாற்றாக யார்?

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்து வரும் விவிஎஸ் லக்‌ஷ்மண், ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ஆகலாம் என்று பேசப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக என்சிஏ தலைமை பதவியில் இருந்து வரும் லக்‌ஷ்மண், டிராவிட் இல்லாதபோது இடைக்கால பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார்.

லக்‌ஷ்மண் தலைமையில் இந்தியா அணி ஆசிய விளையாட்டு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் பங்கேற்றுள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியா முன்னாள் வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தலைமை பயிற்சியாளருமான ஜஸ்டின் லேங்கரும் இந்திய அணிக்கான தலைமை பயிற்சியாளருக்கான லிஸ்டில் இருந்து வருகிறார். இதையடுத்து பிளெமிங், லக்‌ஷ்மண், லேங்கர் ஆகியோரில் யார் அந்த இடத்தை பிடிக்க போகிறார்கள் அல்லது வேறு யாரேனும் பயிற்சியாளராக ஆக போகிறாரா என்பது ஆவலை ஏற்படுத்தும் விஷயமாகவே இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி