தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rcb: இனி ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் தான்! ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற ஆர்சிபி இதை செய்தால் மட்டும் போதும்

RCB: இனி ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் தான்! ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற ஆர்சிபி இதை செய்தால் மட்டும் போதும்

Apr 26, 2024, 05:57 PM IST

google News
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கட்டாயமாக வென்றாக வேண்டிய போட்டியில் வெற்றியை பெற்று ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. இனி அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் போன்றே அமைந்துள்ளது. ஒரே தோல்வியை பெற்றாலும் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக மாறிவிடும். (AFP)
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கட்டாயமாக வென்றாக வேண்டிய போட்டியில் வெற்றியை பெற்று ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. இனி அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் போன்றே அமைந்துள்ளது. ஒரே தோல்வியை பெற்றாலும் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக மாறிவிடும்.

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக கட்டாயமாக வென்றாக வேண்டிய போட்டியில் வெற்றியை பெற்று ப்ளேஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது ஆர்சிபி அணி. இனி அந்த அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் நாக்அவுட் போன்றே அமைந்துள்ளது. ஒரே தோல்வியை பெற்றாலும் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக மாறிவிடும்.

ஐபிஎல் 2024 தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு, அதிர்ஷ்டம் இல்லாத அணியாகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு இருந்து வருகிறது. இதையடுத்து 6 தொடர் தோல்விகளுக்கு பின்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணி ப்ளேஆஃப் சுற்றில் விளையாடும், இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணி குவாலிபயர் 1 போட்டியிலும், மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணி எலிமினேட்டர் போட்டியிலும் விளையாடும். குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியடையும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும். இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

ஆர்சிபி அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு

பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 7 போட்டிகளிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற நிலையில், இனி எஞ்சியிருக்கும் 5 போட்டிகளிலும் கண்டிப்பாக வென்றால் மட்டுமே ஆர்சிபி அந்த வாய்ப்பை பெற முடியும். அதில் முதல் இரண்டு இடங்களை கண்டிப்பாக பெற முடியாது. இருப்பினும் 3 அல்லது 4வது இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாடலாம்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் வெற்றியை பெற்று ப்ளேஆஃர் ரேஸை தக்க வைத்துள்ளது ஆர்சிபி. ஒரு வேளை சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியிருந்தால் ப்ளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக இருந்திருக்கும்.

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணி இனி குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக 2 போட்டிகள், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே அணிக்கு எதிராக தலா ஒரு போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றியும், சிஎஸ்கேவுக்கு எதிராக தோல்வியும் தழுவியுள்ளது.

ப்ளேஆஃப் இடங்களுக்கு போட்டி

ப்ளேஆஃப் சுற்றை பொறுத்தவரை அதிக வெற்றிகளை பெறும் அணிகள் டாப் 2 இடங்களை பிடித்து விடும். அந்த வகையில் டாப் இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நிலவி வருகிறது. இதில் இரண்டு அணிகள் முன்னேறினாலும் மீதமுள்ள ஒரு அணி மூன்று அல்லது நான்காவது இடத்தை பிடிக்கலாம்.

அதேபோல் மூன்று மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டி என்பது எப்போதும் கடுமையாக நிலவும், தற்போது அந்த ரேஸில் அதிக வாய்ப்பை பெறும் அணியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சிஎஸ்கே, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்ன்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. இதற்கு அடுத்த வாய்ப்பில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி ஆகியவை உள்ளன.

டாப் இடங்களில் இருக்கும் பார்ம் இழந்து தொடர் தோல்விகளை பெறும் பட்சத்திலும், கடைசி கட்டத்தில் இருக்கும் அணிகள் இனி வரும் போட்டிகளில் விஸ்வரூபம் எடுத்து தொடர் வெற்றிகளை பெறும் பட்சத்திலும் புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றம் நிகழலாம்.

ஆர்சிபிக்கு எளிதான போட்டிகள்

ஆர்சிபி அணிக்கு இனி வரும் போட்டிகள் தற்போது டாப் 4 இடத்தில் இருக்கும் அணிகளுடன் இல்லை. சாம்பியன் அணிகளான குஜராத்தை இரண்டு முறை எதிர்கொள்கிறது. அதேபோல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கேவுக்கு எதிராக மோதவுள்ளது.

இதில், மூன்று போட்டிகள் தங்களது உள்ளூர் மைதானத்தில் நடைபெற இருப்பது சாதகமான விஷயமாக உள்ளது. அத்துடன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டி பேட்டிங் பேரடைஸாக கருதப்படும் தரம்சாலாவில் நடைபெறவுள்ளது. எனவே பவுலிங்கை காட்டிலும், பேட்டிங்கில் பலம் மிக்க அணியாக இருந்து வரும் ஆர்சிபி சரியாக திட்டமிட்டால் அனைத்து போட்டிகளையும் வெல்லலாம்.

எனவே ஆர்சிபிக்கான ப்ளேஆஃப் வாய்ப்பு அந்த அணி விளையாடி இருக்கும் அடுத்த போட்டியின் முடிவை பொறுத்த அமையவுள்ளது. தனது அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் உள்ளூர் மைதானமான அகமதாபாத்தில் வைத்து ஆர்சிபி எதிர்கொள்ள இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை