தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Zim 3rd T20: சுழலில் வாஷிங்டன் சுந்தர், வேகத்தில் கலீல் அகமது கலக்கல்! இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி

Ind vs Zim 3rd T20: சுழலில் வாஷிங்டன் சுந்தர், வேகத்தில் கலீல் அகமது கலக்கல்! இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி

Jul 10, 2024, 08:19 PM IST

google News
சுழலில் வாஷிங்டன் சுந்தர், வேகத்தில் கலீல் அகமது கலக்கிய நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 என முன்னேறியுள்ளது. (AP)
சுழலில் வாஷிங்டன் சுந்தர், வேகத்தில் கலீல் அகமது கலக்கிய நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 என முன்னேறியுள்ளது.

சுழலில் வாஷிங்டன் சுந்தர், வேகத்தில் கலீல் அகமது கலக்கிய நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-1 என முன்னேறியுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது 1-1 என்ற கணக்கில் தொடர் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் ரியான் பிராக், சாய் சுதர்சன், முகேஷ் குமார், துருவ் ஜூரல் ஆகியோருக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே, கலீல் அகமது, சஞ்சு சாம்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டி20 உலகக் கோப்பை 2024 அணியில் இடம்பெற்றிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், இந்த தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்கினர்.

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் அடித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 66, ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி கடைசி 5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் அடித்தது.

ஜிம்பாப்வே பவுலர்களில் பிளெசிங் முசரபானி, கேப்டன் சிகந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் மட்டும் சிறப்பாகவும், எகானமியுடன் பவுலிங் செய்தனர். மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினர்.

ஜிம்பாப்வே சேஸிங்

183 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னேறியுள்ளது.

ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்களில் டியான் மையர்ஸ் 65, கிளைவ் மடாண்டே 37 ரன்கள் அடித்தனர். இந்திய பவுலர்களில் வாஷிங்டன் சுந்தர் 3, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். கலீல் அகமது ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

சரிந்த டாப் ஆர்டர்

ஜிம்பாப்வே அணியின் டாப் ஆர்டரை பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபட விடாமல் இந்தியாவின் வேக கூட்டணி ஆவேஷ் கான், கலீல் அகமது ஆகியோர் காலி செய்தனர். 6.6 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி தடுமாறியது.

மையர்ஸ் - மடாண்டே பார்ட்னர்ஷிப்

இதையடுத்து நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய மையர்ஸ், ஏழாவது பேட்ஸ்மேனாக பேட் செய்ய வந்த மடாண்டே ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து மெல்ல மெல்ல ரன்களை சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.

மடாண்டே 26 பந்துகளில் 37 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த மையர்ஸ் அரைசதம் அடித்ததுடன் 49 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக வெளியேறினார்.

வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது கலக்கல் பவுலிங்

இந்திய பவுலிங்கில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 4 ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இவர் மொத்தமாக 18 டாட் பந்துகளை வீசினார்.

அதேபோல் சுழலில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் 4 ஓவரில் 15 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 11 டாட் பந்துகளை வீசிய இவர் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட தனது ஓவரில் விட்டுக்கொடுக்கவில்லை. தனது அற்புத பவுலிங்கால் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மற்றொரு ஸ்பின்னரான ரவி பிஷ்னோய் தனது 4 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி