Ind vs Zim 1st T20: தெறிக்கவிட்ட ஸ்பின் கூட்டணி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர்! தட்டி தடுமாறி ரன் குவித்த ஜிம்பாப்வே
இந்திய ஸ்பின் கூட்டணியான ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பந்து வீச்சில் தெறிக்கவிட்ட நிலையில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் தட்டி தடுமாறி ரன்கள் எடுத்தனர்.

தெறிக்கவிட்ட ஸ்பின் கூட்டணி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர் (AP)
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெற்றி கொண்டாட்டத்துக்கு பின்னர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது.
சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திரா ஜடேஜா ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், மற்ற முக்கிய வீர்ரகளான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்பட டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்தியா அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.