தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Virat Kohli Retires: இதுதான் எனது கடைசி டி20 போட்டி.!.அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமிது - கோலி எமோஷனல்

Virat Kohli Retires: இதுதான் எனது கடைசி டி20 போட்டி.!.அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமிது - கோலி எமோஷனல்

Jun 30, 2024, 12:21 AM IST

google News
இதுதான் இந்தியாவுக்காக எனது கடைசி டி20 போட்டி. அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமிது எனக் கூறி இந்தியா நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். வெற்றியோ, தோல்வியோ என எதுவாக இருந்தாலும் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியிருப்பேன் என்று கூறினார். (REUTERS)
இதுதான் இந்தியாவுக்காக எனது கடைசி டி20 போட்டி. அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமிது எனக் கூறி இந்தியா நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். வெற்றியோ, தோல்வியோ என எதுவாக இருந்தாலும் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியிருப்பேன் என்று கூறினார்.

இதுதான் இந்தியாவுக்காக எனது கடைசி டி20 போட்டி. அடுத்த தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமிது எனக் கூறி இந்தியா நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார். வெற்றியோ, தோல்வியோ என எதுவாக இருந்தாலும் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தியிருப்பேன் என்று கூறினார்.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரை வென்று இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் ஆகியுள்ளது இந்தியா. இந்தியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே பார்போடாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோலி ஓய்வு அறிவிப்பு

இந்த போட்டியில் தரமான இன்னிங்ஸ் வெளிப்படுத்திய விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அணியின் டாப் ஸ்கோரராக இருந்ததோடு, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆட்டநாயகன் விருதை பெறும்போது டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் கோலி

இது குறித்து விராட் கோலி கூறியதாவது, "இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை. நாங்கள் இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். சில நாள்கள் நீங்கள் ரன் எடுக்க முடியாது என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதன் பிறகு எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.

அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம்

கடவுள் பெரியவர். அணிக்கு வேண்டிய வேலையை வேண்டிய நாளில் செய்து முடித்துள்ளேன். இப்போது அல்லது எப்போதும் இந்தியாவுக்கு நான் விளையாடிய கடைசி டி20 இதுதான். கோப்பையை கையில் உயர்த்தி பிடிக்க விரும்பினேன். கட்டாயப்படுத்தி கொள்வதை விட சூழ்நிலையை மதிக்க விரும்பினேன்.

இது ஒரு திறந்த ரகசியம், அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது. சில அற்புதமான வீரர்கள் அணியை முன்னோக்கி அழைத்துச் சென்று கொடியை உயர்த்துவார்கள்.

ரோஹித் தகுதியானவர்

ரோஹித் ஒன்பது டி20 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார், இது என்னுடைய ஆறாவது உலகக் கோப்பை. எனவே சச்சின் போல் வீரர்கள் தோலில் சுமக்க அவர் தகுதியானவர். கடந்த சில போட்டிகளில் நம்பிக்கை இல்லாமல் போயிருந்தது. ஆனால் இப்போது நன்றியுடனும் பணிவுடனும் தலை வணங்குகிறேன். விளையாட்டில் உணர்ச்சிகளை தடுத்து நிறுத்துவது கடினம்" என்று கூறினார்.

கோலி சாதனை

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பேட்டிங்கில் மோசமான பார்மில் இருந்த விராட் கோலி, இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதுடன் மூன்று முறை மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்தார். முக்கியத்துவம் மிக்க இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்த கோலி, இந்த தொடரில் முதல் அரைசதத்துடன் 76 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கினார்.

டி20 போட்டிகளில் விராட் கோலி

இந்திய அணிக்காக 125 போட்டிகளில் விளையாடியுள்ளார் விராட் கோலி. இதில் 4188 ரன்கள் அடித்திருக்கும் கோலி, ஒரு சதம், 39 அரை சதங்களை அடித்துள்ளார். டி20 போட்டிகளில் கோலியின் சராசரி 48.69 எனவும், ஸ்டிரைக் ரேட் 137.04 என உள்ளது. 375 பவுண்டரி, 126 சிக்ஸர்கள் அடித்திருக்கும் அவர், 54 கேட்ச்களை பிடித்துள்ளார். அதேபோல் பவுலிங்கிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி