தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Pak Vs Usa Result: பாகிஸ்தானை அப்செட் செய்த யுஎஸ்ஏ! சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி - காரணமாக இருந்த இந்தியர்

PAK vs USA Result: பாகிஸ்தானை அப்செட் செய்த யுஎஸ்ஏ! சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி - காரணமாக இருந்த இந்தியர்

Jun 07, 2024, 02:15 AM IST

google News
ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை அழைத்து சென்று பாகிஸ்தானை அப்செட் செய்த யுஎஸ்ஏ சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னணியில் செளரப் நெட்ரவால்கர் என்ற இந்தியர் இருந்துள்ளார். மோசமான பவுலிங், பீல்டிங்கால் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்துள்ளது பாகிஸ்தான் (AP)
ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை அழைத்து சென்று பாகிஸ்தானை அப்செட் செய்த யுஎஸ்ஏ சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னணியில் செளரப் நெட்ரவால்கர் என்ற இந்தியர் இருந்துள்ளார். மோசமான பவுலிங், பீல்டிங்கால் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்துள்ளது பாகிஸ்தான்

ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை அழைத்து சென்று பாகிஸ்தானை அப்செட் செய்த யுஎஸ்ஏ சிறப்பான வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னணியில் செளரப் நெட்ரவால்கர் என்ற இந்தியர் இருந்துள்ளார். மோசமான பவுலிங், பீல்டிங்கால் சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்துள்ளது பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை தொடரின் 11வது போட்டி பாகிஸ்தான் - யுஎஸ்ஏ இடையே டல்லாஸில் நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியாக இது அமைந்திருந்தது.

டி20 உலகக் கோப்பை தொடரில் யுஎஸ்ஏ அணி தனது முதல் போட்டியில் கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி இந்த தொடரின் முதல் போட்டியில் களமிறங்கியது.

பாகிஸ்தான் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மோனாங்க் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 44. ஷதாப் கான் 40, ஷாகின் அப்ரிடி 23 ரன்கள் அடித்தனர்.

யுஎஸ்ஏ பவுலர்களில் நோஸ்துஷ் கென்ஜிகே 3, சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அலி கான், ஜஸ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

யுஎஸ்ஏ பவுலர்களில் செளரப் நெட்ரவால்கர், 2010ஆம் ஆண்டில் இந்திய யு19 அணியில் விளையாடிய வீரராக உள்ளார்.

யுஎஸ்ஏ சேஸிங்

இதைத்தொடர்ந்து 160 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கிய யுஎஸ்ஏ 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனால் ஸ்கோர் சமன் ஆகி ஆட்டம் டை ஆனது. யுஎஸ்ஏ அணியில் கேப்டன் இன்னிங்ஸை வெளிப்படுத்திய மோனாங்க் படேல் 50 ரன்கள் அடித்தார். முதல் போட்டியில் 11 சிக்ஸர்களை பறக்க விட்ட ஆரோன் ஜோன்ஸ் 36, ஆண்ட்ரிஸ் கௌஸ் 35 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தான் பவுலர்களில் முகமது ஆமிர், நஷிம் ஷா, ஹரிஸ் ராஃப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்த போட்டியில் யுஎஸ்ஏ அணி முதலில் பவுலிங்கில் பாகிஸ்தானை நன்கு கட்டுப்படுத்தியது. அதன் பின்னர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டது. 

பாகிஸ்தான் அணி மோசமான பீல்டிங்கால் தேவையில்லாத ரன்களை விட்டுக்கொடுத்தது.

சூப்பர் ஓவர் டிராமா 

சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த யுஎஸ்கே அணி அந்த ஓவரில் 18 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியில் முகமது ஆமிர் சூப்பர் ஓவரை வீசினார். 

முதல் மூன்று பந்துகளை எதிர்கொண்ட ஆரோன் ஜோன்ஸ் முறையே 4,2,1 என 7 ரன்கள் அடித்தார். இதற்கு அடுத்து நான்காவது பந்தை ஹர்மீத் சிங் எதிர்கொண்டார். அது வைட் ஆக, கூடுதலாக ஒரு ரன் பையும் எடுக்கப்பட்டது.

நான்கவது பந்தில் ஜோன்ஸ் 1 ரன் அடிக்க, ஐந்தாவது பந்தை மீண்டும் வைட் ஆக வீசினார் ஆமிர். அந்த பந்தில் மற்றொரு பை ரன் எடுக்கப்பட்டது.

பின்னர் சூப்பர் ஓவரின் ஐந்தாவது பந்தில் 2 ரன்கள், ஆறாவது பந்து மீண்டும் வைட் ஆக அதில் 2 பை எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் ஒரு ரன் மட்டும் எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்கள் அடிக்க, 7 ரன்கள் உதிரிகளாக கிடைத்தன. 

பாகிஸ்தான் அணி வெற்றி பெற சூப்பர் ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. 

பாகிஸ்தான் தோல்வி 

பாகிஸ்தான் அணிக்கு சூப்பர் ஓவரில் பேட் செய்ய இப்திகார் அகமது, ஃபகத் ஜமான் ஆகியோர் பேட் செய்தனர்.

யுஎஸ்ஏ அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளரும், இந்தியாவை சேர்ந்தவருமான செளரப் நெட்ரவால்கர் பவுலிங் செய்தார்.

முதல் பந்து டாட், இரண்டு பந்து பவுண்டரி, அடுத்த பந்து வைட் வீசினார். பின்னர் ஓவரின் மூன்றாவது பந்தில் சிக்ஸருக்கான முயற்சியில் பெரிய ஷாட் ஆடிய இப்திகார் கேட்ச் முறையில் அவுட்டானார்.

நான்காவது பந்தை ஷதாப் கான் வீச மீண்டும் வைட் வீசினார் நெட்வாட்ல்கர். அதற்கு அடுத்த பந்தில் லெக் பை பவுண்டரி கிடைத்தது. 

ஐந்தாவது பந்தில் ஷதாப் கான் 2 ரன்கள் அடிக்க, கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. 

பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் 12 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்தியாவுக்காக யு19 உலகக் கோப்பை விளையாடிய வீரரான செளரப் நெட்ரவால்கர் சிறப்பாக பவுலிங் செய்து, யுஎஸ்ஏ அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று தந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

 

 

 

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி