LSG vs MI Preview: லக்னோ vs மும்பை மோதலில் யார் வெற்றி பெறுவார்கள்?-புள்ளிப் பட்டியலை குறிவைக்கும் லக்னோ! எம்.ஐ பிளான்?
Apr 30, 2024, 06:00 AM IST
IPL 2024 LSG vs MI Preview: ரோஹித் சர்மாவின் பிறந்தநாளான ஏப்ரல் 30ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணியை எதிர்கொள்கிறது. எல்எஸ்ஜி ஒன்பது போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணி 9 ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. MI தனது கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. ஏப்ரல் 30 அன்று முன்னாள் எம்ஐ கேப்டன் ரோஹித் சர்மாவின் பிறந்தநாள். நட்சத்திர பேட்டருக்கு நாளை 37 வயதாகிறது. இதனால், அவருக்கு இன்றைய தினம் ஸ்பெஷலாக இருக்கும்.
இந்த இரு அணிகளும் கடைசியாக கடந்த ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் மோதின. MI 20 ஓவரில் 182/8 எடுத்தது. லக்னோ 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்களில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.
LSG vs MI பேண்டஸி டீம்
கே.எல். ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மொஹ்சின் கான், ரவி பிஷ்னோய், மற்றும் ஹர்திக் பாண்டியா.
LSG vs MI பிட்ச் ரிப்போர்ட்
லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக போட்டிகளில் குறைவான ஸ்கோரை பதிவு செய்கிறது. ஏனெனில் அது மெதுவாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு சிறப்பாக செயல்படுகிறார்கள்.
இங்கு நடந்த கடைசி ஆட்டத்தில் லக்னோ 196/5 என்ற ஸ்கோரை பதிவு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
LSG vs MI வானிலை
மாலையில் லக்னோவில் வெப்பநிலை சுமார் 29 டிகிரியாக இருக்கும். இருப்பினும், உண்மையான உணர்வு 27 டிகிரியாக இருக்கும். ஈரப்பதம் சுமார் 13 சதவீதமாக இருக்கும். மழைக்கு வாய்ப்பே இல்லை.
LSG vs MI கணிப்பு
கூகுளின் வெற்றி நிகழ்தகவின் படி, MI, லக்னோவை வீழ்த்த 55 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மும்பைக்கு கடும் சவால் அளிக்க லக்னோ அனைத்து யுக்திகளையும் வகுத்து வரும்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 17வது சீசன் நடந்து வருகிறது. 2008ல் தொடங்கிய இந்த மெகா லீக், ஏற்கனவே 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 8 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக்கில் தற்போது பத்து அணிகள் பங்கேற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் 2022ல் பங்கேற்றன. கடந்த இரண்டு சீசன்களில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று அறியப்படுகிறது. இந்த மெகா லீக் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
டாபிக்ஸ்