GT vs DD Innings Break: டெல்லியின் பவுலிங் ஸ்கெட்ச்! இந்த சீசனில் குறைவான ஸ்கோர் எடுத்த குஜராத்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Gt Vs Dd Innings Break: டெல்லியின் பவுலிங் ஸ்கெட்ச்! இந்த சீசனில் குறைவான ஸ்கோர் எடுத்த குஜராத்

GT vs DD Innings Break: டெல்லியின் பவுலிங் ஸ்கெட்ச்! இந்த சீசனில் குறைவான ஸ்கோர் எடுத்த குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 18, 2024 01:00 AM IST

பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பவுலிங் செய்த டெல்லி கேபிடலிஸ், குஜராத் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினர். ஐபிஎல் போட்டிகளில் மிகவும் குறைவான ஸ்காரை குஜராத் அணி எடுத்துள்ளது.

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்
ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (PTI)

குஜராத் அணியில் விருத்திமான சாஹா, டேவிட் மில்லர், சந்தீப் வாரியர் ஆகியோர் அணிகளுக்கு திரும்பியுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் பார்மில் இல்லாமல் இருக்கும் டேவிட் வார்னருக்கு பதிலாக சுமித் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்ன்ஸ் 17.3 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. இந்த சீசனில் 100 ரன்களுக்கு குறைவாக எடுத்த அணியாக குஜராத் டைட்ன்ஸ் உள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 31, சாய் சுதர்சன் 12, ராகுல் திவாட்டியா 10 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்கில் முகேஷ் குமார் 3, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கலீல் அகமது, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பவுலிங்கில் கலக்கிய டெல்லி பந்து வீச்சாளர்கள்

ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்கோப்பாக பவுலிங் செய்த டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் பவர்ப்ளே முடிவதற்குள் குஜராத்தின் டாப் ஆர்டரை காலி செய்தனர். இந்த சூழ்நிலையில் குஜராத் அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்ட நிலையில், அதையும் தடுத்தனர்.

தாக்கம் தராத இம்பேக்ட் வீரர்

முதல் 10 ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த தடுமாறிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் இம்பேக்ட் வீரராக ஷாருக்கான் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் எந்தவொரு தாக்கமும் ஏற்படுத்தாமல் அடித்து ஆட முயன்று முதல் பந்திலேயே கோல்டன் டக்அவுட்டாகி வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் களமிறங்கிய ரஷித் கான் ஓரளவு பொறுமையாக பேட் செய்ததன் விளைவால் குஜராத் அணியின் ஸ்கோர் கொஞ்சம் உயர்ந்தது. ஆனால் அவர் அவுட்டான பின்னர் துர்தஷ்டவசமாக 100 ரன்களை கூட கடக்க முடியாமல் ஆல்அவுட்டானது.

இதன் மூலம் இந்த சீசனில் 100 ரன்களை கூட கடக்காமல் ஆல்அவுட்டான முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் மாறியது. அத்துடன் இதுவே அந்த அணியின் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக மாறியது.

குறைவான ஸ்கோர்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.