USA vs CAN Result: டி20 உலகக் கோப்பை கோலாகல தொடக்கம்.. முதல் மேட்ச்சில் அமெரிக்கா வெற்றி
Jun 02, 2024, 10:05 AM IST
T20 World Cup 2024: டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நவ்னீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டனின் அரைசதங்கள் கனடாவை 194/5 ரன்கள் எடுக்க உதவியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2024 இன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக நவ்னீத் தலிவால் மற்றும் நிக்கோலஸ் கிர்டன் ஆகியோரின் அரைசதங்கள் கனடா 194/5 ரன்கள் எடுக்க உதவியது.
டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தாலும், அவர்களின் முடிவு அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.
கனடா தரப்பில் ஆரோன் ஜான்சன் - நவ்னீத் தலிவால் ஜோடி 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அமெரிக்கா வெற்றி
6-வது ஓவரில் அமெரிக்க பந்துவீச்சாளர் ஜான்சனை கிரீசில் இருந்து வெளியேற்றிய ஹர்மீத் சிங் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் மேட்ச்சில் அமெரிக்கா-கனடா மோதியது. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
அமெரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடி கனடா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.
கனடா வீரர்கள் ஆரோன் ஜான்சன் 23 ரன்களும், நவ்னீத் தலிவால் 61 ரன்களும் விளாசினர். பர்கத் சிங் 5 ரன்களும், நிகோலஸ் கிர்டான் 51 ரன்களும் விளாசினர். ஸ்ரேயாஸ் மொவ்வா 32 ரன்கள் எடுத்தார்.
தில்ப்ரீத் சிங் 11 ரன்களும், தில்லன் ஹேலைகர் 1 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா விளையாடியது. அமெரிக்க அணியின் ஸ்டீவன் டெய்லர் டக் அவுட்டானார். மோனங் படேல், 16 ரன்கள் எடுத்தார்.
ஆன்ட்ரிஸ் கவுஸ் அரை சதமும், ஆரோன் ஜோன்ஸ் 94 ரன்களும் விளாசினர். கோரி ஆன்டர்சன் 3 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக அந்த அணி 17.4 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்தது. 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அமெரிக்கா ஜெயித்தது.
கலீம் சனா, டில்லன் ஹேலிகர், நிகிதா தத்தா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 20224 டி-20 உலகக் கோப்பைக்கான தனது முதல் மற்றும் ஒரே பயிற்சி ஆட்டத்தை நேற்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது. ஜூன் 5 ஆம் தேதி அதே இடத்தில் அயர்லாந்துக்கு எதிரான மோதலுடன் இந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்கான மென் இன் ப்ளூவின் அதிகாரப்பூர்வ தொடக்கத்திற்கு முன்னதாக இந்த போட்டி அமைந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
கோலி விளையாடவில்லை
பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் அணியின் சமநிலையை சரியாகப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள், அதே நேரத்தில் ஆடுகளத்தின் நிலையை மதிப்பிட்டு செயல்பட்டார்கள்.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 182 ரன்களை சேர்த்தது.
இதனிடையே இன்றிரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா இடையேயான போட்டி கயானாவில் நடைபெறவுள்ளது.
டாபிக்ஸ்