MTV Splitsvilla 15: ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..! உர்ஃபி ஜாவேத்தின் செம ஃபன் டாஸ்க்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mtv Splitsvilla 15: ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..! உர்ஃபி ஜாவேத்தின் செம ஃபன் டாஸ்க்

MTV Splitsvilla 15: ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..! உர்ஃபி ஜாவேத்தின் செம ஃபன் டாஸ்க்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 16, 2024 01:52 PM IST

சோசியல் மீடிய பிரபலம் உர்ஃபி ஜாவேத்தின் செம ஃபன் டாஸ்க் உடன் ஸ்ப்ளிட்ஸ்வில்லா இந்த வாரம் நிகழ்ச்சி சென்றுள்ளது. உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி போட்டியாளர்கள் மத்தியில் சிக்கலை உருவாக்க அவர்களின் உறவுகளில் உள்ள பலவீனங்களை வெளிக்கொண்டு வந்து காட்டியது.

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உர்ஃபி ஜாவேத்தின் செம ஃபன் டாஸ்க்
ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உர்ஃபி ஜாவேத்தின் செம ஃபன் டாஸ்க்

இந்த வாரம் காதலர்களை பிரிக்கும் வேலையை செய்யும் குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத் காதலர்கள் மத்தியில் ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்து அவர்களை போட்டி போட வைத்துள்ளார்.

சட்டி - பட்டீஸ் டாஸ்க்

சமீபத்திய சவாலில், ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் ’சட்டி - பட்டீஸ்' ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மோதினர், நட்பு மற்றும் காதலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு சோதைனைகளும் போட்டியாளர்களுக்கான ட்விஸ்ட்டுகளும் இடம்பெற்றன. 

இந்த வினோதமான சட்டிகளை அணியும் போது வரவிருக்கும் சவாலில் அனைத்து நண்பர்களும் அவர்களுக்கான இடத்தை பிடித்தார்களா? இல்லையா என்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ஒரு வலுவான திருப்பத்துக்குப் பிறகு, வெற்றி சிலருக்கு கடினமாக மாறி, மற்றவர்களுக்கு உள்ளுக்குள் இருந்து வெற்றி பெற வேண்டும் என்கிற தீயை பற்ற வைக்கும் விதமாக இந்த டாஸ்க் உள்ளது.  

போட்டியாளர்களுக்கு இடையே மனநிலை பதட்டமாக இருந்தபோதிலும், இதயப்பூர்வமான முறையீடுகள் மற்றும் உணர்ச்சிகரமான பிரச்னைகள் கிளம்பிய நிலையில், ஆடியன்ஸுக்கு சூப்பர் விருந்தாக இந்த எபிசோடு அமைந்துள்ளது.

உர்ஃபி ஜாவித் குறும்புத்தனம்

உர்ஃபியின் குறும்புத்தனமான நடவடிக்கைகள் மேலும், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல உள்ளது. அவர் உள்ளே புகுந்து பண்ண வேலை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அடுத்து என்ன வரப்போகிறது என்பது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 

நயிராவும் அர்பாஸும் ஒரு கடினமான முடிவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அதன் காரணமாக உண்டானது. அதே நேரத்தில் சச்சினின் தலைவிதி ஆபத்தான நிலையில் உள்ளது. நாயராவின் நட்பு கேள்விக்குள்ளானது, சச்சின் புறப்படத் தயாராக இருந்தபோதிலும், மிஸ்சீஃப் பாக்ஸ் தலையீடு காரணமாக சிக்கல் மேலும், பெரிதானது. இதனால் ரிக்டென் மற்றும் ஆயுஷ்மான் இருவரும் தூக்கி எறியப்பட்டனர், அதே நேரத்தில் சச்சின் ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் தனது பயணத்தைத் தொடர வாய்ப்பும் கிடைத்தது.

உர்ஃபி ஜாவேத்தின் அதிரடி ஆட்டம் ஸ்ப்ளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அடுத்து என்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதை ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் உள்ள போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பல பிரச்னைகளுடன் அந்த இரவு முடிய மறுநாள் காலை மேலும், பதட்டங்கள் அதிகரித்தன. நயிரா தனது நண்பர்கள் சச்சின் மற்றும் திக்விஜய் ஆகியோருடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். 

பல்வேறு குற்றச்சாட்டுகள் பறந்தபோது பழைய தீராக் காயங்கள் மீண்டும் தோன்றின, இது வில்லாவில் உள்ள காதலர்கள் மத்தியில் mtv splitsvilla 15, urfi javed. 

உர்ஃபியின் விளையாட்டுக்கள் போட்டியாளர்களை பல்வேறு மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அடுத்தடுத்த சவால், உர்பியால் வடிவமைக்கப்பட்ட “சட்டி பட்டி” உள்ளது. 

ஜாலியான குத்துச்சண்டை மற்றும் இதயத்தைத் தூண்டும் செயல்களை உள்ளடக்கியது, ஒவ்வொரு சவால் வழியாக செல்லும்போது, உணர்ச்சிகரமான நடனங்கள் முதல் மென்மையான தருணங்கள் வரை, குழப்பங்களுக்கு மத்தியில் காதல் மலர்வதை வில்லா கண்டது.

இந்த போட்டியின் இறுதியில் ஸ்ப்ளிட்வில்லா போட்டியாளர்கள் ஒன்றாக ஒரே அணியில் தங்கள் வலிமையை காட்டுவார்களா? அல்லது விளையாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணிவார்களா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்ஸ்கியூஸ் மீ நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பங்களுடன் போட்டியாளர்களின் தலைவிதியை எவ்வாறு வடிவமைக்கும் என்பதை பார்க்க, ஒவ்வொரு வார இறுதியிலும் இரவு 7 மணிக்கு எம்டிவி மற்றும் ஜியோ சினிமாவில் பார்த்து ரசியுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.