தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srh Vs Rr Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட்! பவுலிங்கில் திருப்புமுனை தந்த அபிஷேக் ஷர்மா - பைனலில் நுழைந்த சன் ரைசர்ஸ்

SRH vs RR Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட்! பவுலிங்கில் திருப்புமுனை தந்த அபிஷேக் ஷர்மா - பைனலில் நுழைந்த சன் ரைசர்ஸ்

May 25, 2024, 02:20 AM IST

google News
SRH vs RR Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட் ஆக சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மாவுக்கு பவுலிங் கொடுத்தார். கைமேல் பலனாக இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அபிஷேக் ஷர்மா பவுலிங்கில் திருப்புமுனை தந்தார். இந்த வெற்றியால் மூன்றாவது முறையாக ஐபிஎல் பைனலில் சன் ரைசர்ஸ் நுழைந்துள்ளது. (PTI)
SRH vs RR Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட் ஆக சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மாவுக்கு பவுலிங் கொடுத்தார். கைமேல் பலனாக இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அபிஷேக் ஷர்மா பவுலிங்கில் திருப்புமுனை தந்தார். இந்த வெற்றியால் மூன்றாவது முறையாக ஐபிஎல் பைனலில் சன் ரைசர்ஸ் நுழைந்துள்ளது.

SRH vs RR Qualifier 2: எதிர்பாராத டுவிஸ்ட் ஆக சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ், அபிஷேக் ஷர்மாவுக்கு பவுலிங் கொடுத்தார். கைமேல் பலனாக இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அபிஷேக் ஷர்மா பவுலிங்கில் திருப்புமுனை தந்தார். இந்த வெற்றியால் மூன்றாவது முறையாக ஐபிஎல் பைனலில் சன் ரைசர்ஸ் நுழைந்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இதே மைதானத்தில் வரும் ஞாயிற்றுகிழமை எதிர்கொள்ளும்.

இதையடுத்து இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐடன் மார்க்ரம், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சன் ரைசர்ஸ் ரன்குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 50, ராகுல் த்ரிபாதி 37, ட்ராவிஸ் ஹெட் 34 ஆகியோர் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்கில் ட்ரெண்ட் போல்ட, ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், யஸ்வேந்திர சஹால் ஆகியோர் விக்கெட்டுகளை எதுவும் வீழ்த்தவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சன் ரைசர்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் குவாலிபயர் 2 போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் பெறும் இரண்டாவது வெற்றியாக இது அமைந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜுரல் 56, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 42 ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் பெரிதாக பங்களிப்பு அளிக்காத நிலையில் தோல்வியை தழுவியது.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் ஸ்பின்னர்களான ஷபாஸ் அகமது 3, அபிஷேக் ஷர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடராஜன், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பேட்டிங் சொதப்பல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிரடியான ஓபனிங்கை தந்தார் இளம் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால். தனது பாணியில் வழக்கமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பவுண்டரி, சிக்ஸர் என ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

மறு முனையில் மற்றொரு ஓபனர் டாம் கோஹ்லர்-காட்மோர் 10, சஞ்சு சாம்சன், அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரியான் பிராக் 6 என அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றினார்கள்.

பவுலிங்கில் சொதப்பிய அஸ்வின் பேட்டிங்கில் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 21 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஜெயஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜூரல் போராட்டம்

முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் ஜூரல் மட்டும் ஒற்றை ஆளாக போராட்டத்தை வெளிப்படுத்தினார். இம்பேக்ட் வீரராக வந்த ஷிமரான் ஹெட்மேயர் 4, ரோவ்மன் பவல் 6 என அவுட்டானார்கள்.

இருப்பினும் கடைசி வரை பேட் செய்த ஜூரல் அரைசதம் அடித்ததுடன் 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

அபிஷேக் ஷர்மா தந்த டுவிஸ்ட்

அவுட் ஆஃப் சிலபஸாக வந்து ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கில் திருப்பம் தந்தார் அபிஷேக் ஷர்மா. பேட்டிங்கில் சொதப்பிய அவரை திடீர் டுவிஸ்டாக பவுலிங் செய்ய வைத்த பேட் கம்மின்ஸ்க்கு கைமேல் பலனாக இரண்டு முக்கிய விக்கெட்டுகளும் கிடைத்தது. முன்னணி பேட்ஸ்மேன்களான சஞ்சு சாம்சன், ஷிமரான் ஹெட்மேயர் ஆகியோரின் விக்கெட்டுகளை தூக்கி திரும்ப்புமுனை ஏற்படுத்தினார் அபிஷேக்.

மற்றொரு ஸ்பின்னராக ஷபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் செய்யும்போது ஸ்பின் பவுலிங்குக்கு ஆடுகளம் கைகொடுக்காத நிலையில், சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது. எனவே ஸ்பின்னர்கள் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை