SA vs ENG Result: அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட எட்டிபிடித்த தென் ஆப்பரிக்கா! டி20 உலகக் கோப்பை தொடரிலும் புதிய சாதனை
Jun 22, 2024, 12:04 AM IST
ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று அணியாக இலங்கை, ஆஸ்திரேலியாவுடன் இணைந்துள்ளது தென் ஆப்பரிக்கா சாதனை புரிந்துள்ளது. இங்கிலாந்து எதிராக பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய தென் ஆப்பரிக்கா வெற்றி பெற்ற அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட எட்டிபிடித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 45வது போட்டி, சூப்பர் 4 சுற்று 5வது போட்டி தென் ஆப்பரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்றது. இந்த இரு அணிகளும் சூப்பர் 8 தங்களது முதல் போட்டியில் வெற்றியை பெற்றிருந்தன. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பை தாக்கவைத்து கொள்ளும் என்ற நிலை இருந்தது.
தென் ஆப்பரிக்கா ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 65, டேவிட் மில்லர் 43 ரன்கள் அடித்தனர்.
இங்கிலாந்து பவுலர்களில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், ஸ்பின்னர்கள் மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இங்கிலாந்து சேஸிங்
இதைத்தொடர்ந்து 164 ரன்களை சேஸ் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பரிக்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், அரையிறுதி வாய்ப்பையும் பிரகாசமாக்கி கொண்டுள்ளது.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக ஹார் ப்ரூக் 53, லிவிங்ஸ்டன் 33 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா பவுலர்களில் ஸ்பின்னர் மகாராஜ், வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஒட்னீல் பார்ட்மேன், அன்ரிஜ் நார்ட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இந்த வெற்றியுடன், ஒரு டி20 தொடரில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று இலங்கை, ஆஸ்திரேலியா அணியுடன் இணைந்துள்ளது.
டி காக் அதிரடி
யுஎஸ்ஏ அணிக்கு எதிரான முதல் சூப்பர் 8 போட்டியில் 74 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் குவன்டைன் டி காக். இந்த போட்டியிலும் தனது பேட்டிங் பார்மை தொடர்ந்த அவர், ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினார். 38 பந்துகளில் 68 ரன்கள் அடித்த டி காக், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.
மில்லர் பினிஷ்
தொடக்கத்தில் நிதானமும், பின்னர் கடைசி கட்டித்தில் விரைவாகவும் ரன்கள் குவித்த மில்லர் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஓபனர் ஹென்ட்ரிக்ஸ் அடித்த 19 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
ஹாரி ப்ரூக் அதிரடி வீண்
இங்கிலாந்து இன்னிங்ஸில் டாப் 4 பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை கூட தாண்டாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹாரி ப்ரூக் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தள்ளி அதிவேகமாக ரன்களை குவித்தார். 37 பந்துகளில் 53 ரன்கள், 7 பவுண்டரி அடித்த ப்ரூக் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அவருடன் இணைந்து லியாம் லிவிங்ஸ்டனும் ராக்கெட் வேக இன்னிங்ஸை விளையாடினார். ஆனாலும் இவர்களின் ஆட்டம் இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவாமல் போயுள்ளது.
இந்த போட்டியில் தோல்வியை தழுவியிருக்கும் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அடுத்து யுஎஸ்ஏ அணிக்கு எதிரான போட்டியில் மிக பெரிய ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை கிட்டும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்