தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rr Vs Gt Innings Break: ரியான் பராக் அதிரடி! கடைசி 10 ஓவரில் 123 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

RR vs GT Innings Break: ரியான் பராக் அதிரடி! கடைசி 10 ஓவரில் 123 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

Apr 10, 2024, 10:59 PM IST

google News
சஞ்ச சாம்சன் - ரியான் பராக் ஆகியோர் இணைந்து 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடி காட்டி விளையாடிய ரியான் பராக் 76 ரன்கள் அடித்தார். (PTI)
சஞ்ச சாம்சன் - ரியான் பராக் ஆகியோர் இணைந்து 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடி காட்டி விளையாடிய ரியான் பராக் 76 ரன்கள் அடித்தார்.

சஞ்ச சாம்சன் - ரியான் பராக் ஆகியோர் இணைந்து 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிரடி காட்டி விளையாடிய ரியான் பராக் 76 ரன்கள் அடித்தார்.

ஐபிஎல் 2024 தொடரின் 24வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 4 போட்டிகளையும் வென்று, தோல்வியடையாத ஒரே அணியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. குஜராத் டைட்ன்ஸ் 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 7வது இடத்தில் உள்ளது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மேத்யூ வேட், பிஆர் ஷரத்துக்கு பதிலாக அபினவ் மனோகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குஜராத் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டனஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ரியான் பராக் 76, சஞ்சு சாம்சன் 68 ரன்கள் எடுத்தனர். கடைசி 10 ஓவரில் அந்த அணி 123 ரன்கள் எடுத்தது. 

குஜராத் பவுலர்களில் சிறப்பாக பவுலிங் செய்த ஸ்பின்னர் ரஷித் கான் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பார்ம் இல்லாமல் தவிக்கும் ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் ராயல்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேனான ஜோஸ் படலர் 8 ரன்னில் வெளியேறினார். பார்ம் இல்லாமல் தவித்து வரும் யஸஷ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கத்தை தந்த போதிலும் பெரிய ஸ்காராக மாற்ற முடியாமல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன் - ரியான் பராக் பார்டனர்ஷிப்

ராஜஸ்தான் அணியின் ஓபனர்கள் அடுத்தடுத்து அவுட்டான நிலையில், அடுத்ததாக பேட் செய்த சஞ்சு சாம்சன் - ரியான் பராக் கூட்டணி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பொறுப்புடன் பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

இருவரும் மாறி மாறி பவுண்டரி சிக்ஸர் என ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சாம்சன், பராக் ஆகியோர் அரைசதத்தை பூர்த்தி செய்ய மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் 130 ரன்கள் சேர்த்தனர்.

ஆட்டத்தின் 18.4 ஓவரில் ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சஞ்சு சாம்சன் 387 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரன்களை வாரி வழங்கிய மோகித் ஷர்மா

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஸ்டிரைக் பவுலரான மோகித் ஷர்மா இந்த போட்டியில் 4 ஓவரில் 51 ரன்கள் வாரி வழங்கி ஒரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றினார்.

இவரை போல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை