தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Csk Vs Srh Innings Break: கெத்து காட்டிய ருதுராஜ்! டேரில் மிட்சல் அதிரடி,டூபே சிக்ஸர் மழை - டெசிபிளை எகிற வைத்த சிஎஸ்கே

CSK vs SRH Innings Break: கெத்து காட்டிய ருதுராஜ்! டேரில் மிட்சல் அதிரடி,டூபே சிக்ஸர் மழை - டெசிபிளை எகிற வைத்த சிஎஸ்கே

Apr 28, 2024, 11:14 PM IST

google News
அதிரடியாக பேட் செய்த ருதுராஜ் - டேரில் மிட்செல் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக ஷிவம் டூபே சிக்ஸர் மழை பொழிந்து ஆட்டத்தை பினிஷ் செய்த நிலையில், சிஎஸ்கே 212 ரன்கள் குவித்துள்ளது. (PTI)
அதிரடியாக பேட் செய்த ருதுராஜ் - டேரில் மிட்செல் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக ஷிவம் டூபே சிக்ஸர் மழை பொழிந்து ஆட்டத்தை பினிஷ் செய்த நிலையில், சிஎஸ்கே 212 ரன்கள் குவித்துள்ளது.

அதிரடியாக பேட் செய்த ருதுராஜ் - டேரில் மிட்செல் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக ஷிவம் டூபே சிக்ஸர் மழை பொழிந்து ஆட்டத்தை பினிஷ் செய்த நிலையில், சிஎஸ்கே 212 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 8 போட்டிகளில் 5 வெற்றியை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த முதல் மோதலில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அத்துடன் இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் தோல்வியை தழுவியுள்ளன. சிஎஸ்கே இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சன் ரைசர்ஸ் அணியில் மயங்க் மார்கண்டேவுக்கு பதிலாக அப்துல் சமாத் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன் ரைசர்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ருதுராஜ் கெய்வாட் 98, டேரில் மிட்செல் 52 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக பேட் செய்த ஷிவம் டூபே 39 ரன்கள் அடித்தார்.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், நடராஜன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர்.

கெத்து காட்டிய ருதுராஜ்

ஓபனராக பேட்டிங் செய்த அஜிங்கியா ரகானோ மற்றொரு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 ரன்னில் அவுட்டாகி புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

மற்றொரு ஓபனரும், கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் ஆரம்பத்தில் இருந்தே சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக அதிரடியாக பேட் ரன் குவித்து வந்தார். இதன் அணியின் ஸ்கோரும் கணிசமாக உயர்ந்தது. இவருடன் இணைந்த டேரில் மிட்செலும் தன் பங்குக்கு அதிரடி காட்டினார்.

சிறப்பாக பேட் செய்த ருதுராஜ் 27 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதன் பின்னரும் அதிரடியை தொடர்ந்த அவர் சிஎஸ்கே அணிக்காக மூன்றாவது சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 98 ரன்கள் எடுத்து 2 ரன்களில் கோட்டை விட்டார். நடராஜன் ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ருதுராஜ் தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி 3 சிக்ஸர் அடித்தார்.

டேரில் மிட்செல்

இந்த சீசனில் இதுவரை பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் பேட்டிங்கில் சொதப்பி வந்தார் டேரில் மிட்செல். ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இதை நன்கு பயன்படுத்திய டேரில் மிட்செல் அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் சிஎஸ்கேவுக்காக 29 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 32 பந்துகளில் 52 ரன்கள் அடித்த அவர் தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.

டூபே சிக்ஸர் மழை

அடுத்த பேட் செய்ய வந்த ஷிவம் டூபே தொடக்கத்தில் பொறுமையாக பேட் செய்த நிலையில் பின்னர் அதிரடி மோடுக்கு மாறினார். சன் ரைசர்ஸ் பவுலர்களுக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்த அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 பந்துகள் மீதம் இருக்கையில் பேட் செய்ய வந்த எம்எஸ் தோனி முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் அடித்து, 5 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். இந்த சீசனில் 7 இன்னிங்ஸ் விளையாடி தோனி, இதுவரை நாட்அவுட் பேட்ஸ்மனாகவே இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி