தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rr Vs Kkr Result: மழையால் அடித்தது லக்! குவாலிபையரில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்த ரன்ரேட்

RR vs KKR Result: மழையால் அடித்தது லக்! குவாலிபையரில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்த ரன்ரேட்

May 20, 2024, 02:29 AM IST

google News
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தான நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு அடித்தது லக். ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயரில் நுழைந்தது. நான்கு தொடர் தோல்விகளால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்தது ரன்ரேட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தான நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு அடித்தது லக். ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயரில் நுழைந்தது. நான்கு தொடர் தோல்விகளால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்தது ரன்ரேட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தான நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு அடித்தது லக். ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயரில் நுழைந்தது. நான்கு தொடர் தோல்விகளால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்தது ரன்ரேட்

ஐபிஎல் 2024 தொடரின் 70வது மற்றும் இந்த சீசனின் கடைசி போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த தொடர் காரணமாக போட்டியானது ரத்தாகியுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் என இரு அணிகளும் 17 புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியதால், குவாலிபயர் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

டாஸ்க்கு பின் போட்டி ரத்து

போட்டி தொடங்குவதற்கு முன்னர் இருந்தே கவுகாத்தியில் தொடர் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதையடுத்து 10 மணிக்கு மேல் மழை நின்று விளையாடும் சூழல் உருவானது. அப்போது டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.

போட்டி 7 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில்,10.50 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவத்தார்கள். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகளை அளிக்கப்பட்டன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 போட்டிகளில், 9 வெற்றி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் 8 வெற்றி 17 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.

மழையால் அடித்த லக்

முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் விளையாடாமலேயே ஒரு புள்ளியை பெற்று மூன்றாவது அணியாக ப்ளேஆஃப்பில் நுழைந்தது சன் ரைசர்ஸ்.

இதைத்தொடர்ந்து கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது சன் ரைசர்ஸ். இந்த போட்டிக்கு பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றால் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கலாம் என்று வாய்ப்பு இருந்தது.

ஆனால் இந்த போட்டி மழை காரணமாக நடக்காத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் என இரு அணிகளும் 17 புள்ளிகள் பெற்றது. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் அணி முன்னிலை பெற்றதால் இரண்டாவது இடத்தில் நீடித்து குவாலிபயர் வாய்ப்பு லக்காக அமைந்தது.

அதேபோல் இரண்டாவது இடத்தில் இருந்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ், மழை காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாத காரணத்தால் மூன்றாவது இடத்துக்கு சென்று எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ளது.

நான்கு தொடர் தோல்விகளால் வந்த விணை

இந்த சீசனில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் நான்கு தொடர் வெற்றிகளை பெற்று, 5வது போட்டியில்தான் முதல் தோல்வியை தழுவியது. முதல் 9 போட்டிகளில் 8 வெற்றியை பெற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதன் பின்னர் நான்கு தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் அந்த அணியின் ரன்ரேட்டும் ஆட்டம் கண்டது.

தற்போது மழையால் கடைசி போட்டி ரத்தான நிலையில் தொடர் தோல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட ரன் ரேட் பாதிப்பால் இரண்டாவது இடத்தில் இருந்து சரிந்து மூன்றாவது இடத்துக்கு சென்றதுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிராக எலிமினேட்டர் போட்டியில் விளையாட இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை