Rohit Sharma: எல்லோரும் வாங்க..! Always welcomes you - வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்த ரோகித் ஷர்மா
Jul 03, 2024, 07:03 PM IST
டி20 உலகக் கோப்பை 2024 வென்ற இந்திய அணி நாடு திரும்பியிருக்கும் நிலையில் மும்பையில் நடைபெற இருக்கும் வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்துள்ளார் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.
டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ், யுஎஸ்ஏ ஆகிய நாடுகளில் நடைபெற்றது. ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரான இதை ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாம்பியன் ஆனது. இது இந்தியா வென்ற இரண்டாவது டி20 உலகக் கோப்பை தொடராகும்.
2007ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக டி20 உலக சாம்பியன் ஆகியுள்ளது. அத்துடன் 2013இல் தோனி தலைமையில் வென்ற சாம்பியன் டிராபி கோப்பைக்கு பின்னர் 11 ஆண்டு கால கோப்பை வறட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.
கடந்த ஜூன் 29ஆம் தேதி தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியில் வென்று கோப்பை இந்தியா தட்டித்துாக்கிய இந்தியா இன்றுதான் நாடு திரும்பியுள்ளது. இந்திய அணியினர் நாளை வந்தடையவுள்ளார்கள்.
வெற்றி அணிவகுப்பு
இதையடுத்து டி20 உலகக் கோப்பையுடன் மும்பையில் உள்ள மரைன் ட்ரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில் வெற்றி அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர்கள், அணியின் குழுவினர், ஆதரவு பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ரோட்ஷோவில் பங்கேற்க ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா.
இதுதொடர்பாக ரோகித் ஷர்மா தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த சிறப்பு தருணத்தை உங்கள் அனைவருடனும் அனுபவிக்க விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை ஜூலை 4ஆம் தேதி மாலை 5:00 மணி முதல் மரைன் டிரைவ் & வான்கடே மைதானத்தில் வெற்றி அணிவகுப்புடன் கொண்டாடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சூறாவளியால் தாமதம்
இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் வெஸ்ட் இண்டீஸில் ஏற்பட்ட பெரில் சூறாவளி காரணமாக அணியின் புறப்பாடு தாமதமானது. சுமார் 3 நாள்கள் இடைவெளிக்கு பின்னர் இந்திய அணியினர் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியா சாதனை
நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று தோல்வியை சந்திக்காத அணியாக இருந்துள்ளது. இதன் மூலம் தோல்வியே சந்திக்காமல் டி20 உலகக் கோப்பை வென்ற அணி என்ற சாதனையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது. மொத்தம் 9 போட்டிகளில் 8 போட்டிகள் விளையாடிய இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்றது. கனடா அணிக்கு எதிரான லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங், 17 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அத்துடன் ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையும் புரிந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்