தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rohit Sharma Injury: காயம் அச்சுறுத்தல்! பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் களமிறங்குவதில் சிக்கல்? பிட்சை குறை கூறும் பிசிசிஐ

Rohit Sharma Injury: காயம் அச்சுறுத்தல்! பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் களமிறங்குவதில் சிக்கல்? பிட்சை குறை கூறும் பிசிசிஐ

Jun 08, 2024, 05:52 PM IST

google News
காயம் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்ா களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், நியூயார்க் மைதான பிட்ச் அமைப்பை குறை கூறியுள்ளது பிசிசிஐ (PTI)
காயம் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்ா களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், நியூயார்க் மைதான பிட்ச் அமைப்பை குறை கூறியுள்ளது பிசிசிஐ

காயம் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்ா களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில், நியூயார்க் மைதான பிட்ச் அமைப்பை குறை கூறியுள்ளது பிசிசிஐ

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் நியூயார்க்கில் உள்ள கான்டியேக் பூங்காவில் நடந்த பயிற்சியின்போது ரோகித் ஷர்மாவுக்கு காயம் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அயர்லாந்து போட்டியின்போது காயம்

இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் சிறப்பாக பேட் செய்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார். இதையடுத்து இயர்லாந்து பவுலர்கள் வீசிய பந்து எதிர்பாராத பவுன்ஸ் ஆகி ரோகித்தின் தோல்பட்டையில் தாக்கிய நிலையில் வலியால் அவதிப்பட்டார். பின்னர் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி உடனடியாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து வலைப்பயிற்சின்போது த்ரோ ஸ்பெஷலிஸ்ட் நுவான் வீசிய பந்து எதிர்பாராத பவுன்ஸ் ஆகி ரோகித்தின் கைவிரலில் பட்டது. இதனால் மறுபடியும் காயம் அச்சுறுத்தல் ஏற்பட்டது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் வந்து ரோகித்தின் காயத்துக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் மற்றொரு பிட்சில் ரோகித் பயிற்சியை தொடர்ந்து விட்டு சென்றார்.

இந்த சூழ்நிலையில் நியூயார்க்கில் இருக்கும் பிட்ச் குறித்து ஐசிசியிடம் குறை கூறியுள்ளது. ரோகித் போல் விராட் கோலியில் இந்த பிட்சில் பேட்டிங் செய்வதில் பிரச்னையை சந்தித்துள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிக்கும் நியூயார்க் ஆடுகளம்

நியூயார்க் மைதானத்தின் பிட்ச்கள், அதன் சூழ்நிலை வீரர்களையும் நிபுணர்களையும் தொந்தரவு செய்வது இது முதல் முறை அல்ல. இந்த வார தொடக்கத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்கா இடையிலான குறைந்த ஸ்கோரிங் ஆட்டத்துக்குப் பிறகு, நியூயார்க் மைதானத்தில் பயன்படுத்தப்படும் டிராப்-இன் பிட்ச் மற்றும் மோசமான அவுட்ஃபீல்ட் நிலை குறித்து ஐசிசி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

பின்னர் பிட்ச் தரமற்ற நிலையை ஒப்புக்கொண்ட உச்ச அமைப்பு, மீதமுள்ள போட்டிகளில் இந்த சிக்கலை "சரிசெய்ய" முயற்சிப்பதாகக் கூறியது.

இதுகுறித்து ஐசிசி கூறியதாவது, “நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாங்கள் அனைவரும் விரும்பிய அளவுக்கு சீராக விளையாடவில்லை. நேற்றைய ஆட்டம் முடிவடைந்ததிலிருந்து உலகத்தரம் வாய்ந்த மைதான அணி நிலைமையை சரிசெய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடுமையாக உழைத்து வருகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிட்ச் குறித்த பிரச்னை ஒரு புறம் இருக்க ஹை வோல்டேஜ் போட்டியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை நியூயார்க் வாசிகள் எதிர்நோக்கி உள்ளார்கள்.

முதல் போட்டியில் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்ற நெருக்கடி ஒரு புறமும், தனது எதிரயாக பார்க்கும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்கிற அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி