தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rcb Vs Gt Live Score: பவுலிங்கில் கலக்கிய சிராஜ்! பேட்டிங்கில் தடுமாறிய குஜராத் டைட்டன்ஸ்

RCB vs GT Live Score: பவுலிங்கில் கலக்கிய சிராஜ்! பேட்டிங்கில் தடுமாறிய குஜராத் டைட்டன்ஸ்

May 05, 2024, 07:04 AM IST

google News
டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் ஷாருக்கான், ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லர் ஆகியோரின் மீட்பு ஆட்டத்தால் குஜராத் அணி மோசமான ஸ்கோர் குவிக்காமல் தப்பியுள்ளது. இந்த சீசனில் சிறந்த பவுலிங்கை முகமது சிராஜ் பதிவு செய்துள்ளார். (ANI )
டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் ஷாருக்கான், ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லர் ஆகியோரின் மீட்பு ஆட்டத்தால் குஜராத் அணி மோசமான ஸ்கோர் குவிக்காமல் தப்பியுள்ளது. இந்த சீசனில் சிறந்த பவுலிங்கை முகமது சிராஜ் பதிவு செய்துள்ளார்.

டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில் மிடில் ஆர்டரில் ஷாருக்கான், ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லர் ஆகியோரின் மீட்பு ஆட்டத்தால் குஜராத் அணி மோசமான ஸ்கோர் குவிக்காமல் தப்பியுள்ளது. இந்த சீசனில் சிறந்த பவுலிங்கை முகமது சிராஜ் பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2024 தொடரின் 52வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் 4 வெற்றியை பெற்று 8 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 3 வெற்றியுடன், 6 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது அமைந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

இந்த போட்டியில் குஜராத் அணியில் ஜோஷ் லிட்டில், மனவ் சுதர் சேர்க்கப்பட்டுள்ளனர். மனவ் சுதர் முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆர்சிபி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவரில் 147 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது

அதிகபட்சமாக ஷாருக்கான் 37, ராகுல் திவாட்டியா 35, டேவிட் மில்லர் 30 ரன்கள் எடுத்துள்ளனர். ஆர்சிபி பவுலர்களில் முகமது சிராஜ், யஷ் தயாள், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேமரூன் க்ரீன், கரன் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

குஜராத் பேட்டிங் சொதப்பல்

குஜராத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விருத்திமான் சாஹா 1, சுப்மன் கில் 2, பார்மில் இருக்கும் சாய் சுதர்சன் 6 என அடுத்தடுத்து அவுட்டானார்.

இதைத்தொடர்ந்து ஷாருக்கான் - டேவிட் மில்லர் இணைந்து விக்கெட் சரிவை தடுத்து பார்டனர்ஷிப் அமைத்தனர். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் சேர்த்தனர்.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மில்லர் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரை தொடர்ந்து நன்றாக பேட் செய்து வந்த ஷாருக்கானும் துர்தஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக பேட் செய்ய வந்த ராகுல் திவாட்டியாவும் பொறுமையாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடி காட்ட முயற்சித்த ரஷித் கான் 18, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய சங்கர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் 10 ரன்னில் அவுட்டானார்கள்.

ஆர்சிபி பவுலர்கள் கலக்கல்

சிறப்பாக பவுலிங் செய்த யாஷ் தயாள் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வுக்கு பின் சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஸ்பின்னர் கரன் ஷர்மா மட்டும் ரன்களை வாரி வழங்கினார். 3 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி