GT vs RCB Preview: ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முயற்சி! ஆர்சிபி பேட்ஸ்மேன்களுக்கு குஜராத் டைட்டன்ஸ் வைத்திருக்கும் செக்
Apr 28, 2024, 06:40 AM IST
ஆர்சிபி பேட்டிங் வரிசையை நம்பியும், குஜராத் ஸ்பின் பவுலிங்கை வைத்து நெருக்கடி தர வேண்டும் என்கிற நிலையில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன. வலது கை பேட்ஸ்மேன்கள் அதிக இருக்கும் ஆர்சிபியை கட்டுப்படுத்த சாய் கிஷோரை குஜராத் அணி ஆயுதமாக பயன்படுத்தும் என தெரிகிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 45வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் குஜராத் டைட்டன்ஸ் 9 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 9 போட்டிகளில் 2 வெற்றியை பெற்று கடைசி் இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலாக இந்த போட்டி அமைகிறது. இந்த போட்டி மாலை நேர போட்டியாக 3.30 மணிக்கு தொடங்குகிறது.
கத்தி முனையில் ஆர்சிபி
இனி வரும் ஒவ்வொரு போட்டிகளும் ஆர்சிபி அணிக்கு நாக் அவுட் போல் இருப்பதால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் அணி உள்ளது. பேட்டிங்கில் கோலி, ராஜத் பட்டிதார் நல்ல பார்மில் உள்ளார்கள். கேப்டன் டூ ப்ளெசிஸ் அதிரடியான தொடக்கத்தையும், தினேஷ் கார்த்திக் அதிரடி பினிஷிங்கையும் தந்து வருகிறார்கள்.
பவுலிங்கில் ஸ்டார் வீரர்கள் இல்லாவிட்டாலும் இளம் வீரர்களான ஸ்வனில் சிங், யஷ் தயாள் ஆகியோர் கைகொடுத்து வருகிறார்கள். ஸ்பின்னர் கரன் ஷர்மா அனுபவம் கைகொடுத்து வருகிறது. குஜராத் அணியை ஒப்படுகையில் பவுலிங் பலவீனமாகவே இருக்கிறது. எனவே பேட்டிங்கில் முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
வெற்றி பெற்றால் உள்ளே தோல்வி அடைந்தால் வெளியே என்கிற கத்தி முனை நிலையில் களமிறங்குகிறது. அந்த வகையில் வெற்றி காம்பினேஷனை மாற்றாமல் ஆர்சிபி களமிறங்கும் என தெரிகிறது.
கேன் வில்லியம்சனுக்கு வாய்ப்பு?
குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என பக்காவான லைப் அப்பை கொண்டுள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்கும் அஸ்மதுல்லா உமர்சாய் பெரிய பங்களிப்பு அளிக்காத நிலையில், அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியின் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
போட்டி நடைபெறும் அகமதாபாத் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு நன்கு கைகொடுக்கும் என்பதால் சாய் கிஷோர் இந்த போட்டியிலும் இடம் பெறலாம். அத்துடன் ஆர்சிபி அணியில் அதிக வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்த அவர் உதவுவார் என திட்டமிடலாம்.
பிட்ச் நிலவரம்
பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கு சாதகமான அகமதாபாத் மைதானம் இருந்து வருகிறது. மதிய நேர போட்டி என்பதால் ஸ்பின்னர்கள் பிட்ச்சில் நிலவும் வறட்சி ஸ்பின்னர்களுக்கு கைகொடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 40 டிகரி வரை இருக்கும் எனவும் மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது
குஜராத் டைட்டன்ஸ் - ஆர்சிபி அணிகள் இதுவரை
இந்த இரு அணிகளும் மூன்று முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் டைட்ன்ஸ் 2 முறை, ஆர்சிபி ஒரு முறை வென்றுள்ளன. ஆர்சிபி அணிக்கு எதிரான குஜராத் அதிகபட்ச ஸ்கோர் 198 என உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அதிகபட்ச ஸ்கோர் 197 என உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.