LSG vs CSK Innings Break: 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்..!தோனியின் அதிரடி பினிஷ், ஜடேஜா அரைசதம் - சிஎஸ்கே ரன் குவிப்பு
Apr 20, 2024, 01:30 AM IST
ஜடாஜிவின் பொறுப்பான பேட்டிங், எம்எஸ் தோனி அதிரடி பினிஷ், மொயின் அலி, அஜிங்கியா ரகானே ஆகியோரின் கேமியோ ஆட்டத்தால் சிஎஸ்கே அணி 172 ரன்களை குவித்துள்ளது.
இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஷமர் ஜோசப்புக்கு பதிலாக மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல் ஆகியோருக்கு பதிலாக தீபக் சஹார், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
லக்னோ பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா , அஜிங்கியா ரகானோ 36, மொயின் அலி 30,எம்எஸ் தோனி 28 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ பவுலர்களில் க்ருணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கஸ் ஸ்டொய்னிஸ், யஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மோக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
ஜடேஜா அரைசதம்
சர்ப்ரைசாக ரவீந்திர ஜடேஜா நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். தொடக்கத்தில் நிதானமும், கடைசி கட்டத்தில் அதிரடியும் வெளிப்படுத்தி பொறுப்புடன் பேட் செய்த ஜடேஜா அரைசதம் அடித்தார். 40 பந்துகளில் 57 ரன்கள் அடித்த அவர் கடைசி வரை ஆட்டமிழாக்காமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார்.
தோனி பினிஷ்
ஆட்டத்தின் 18வது ஓவர் கடைசி பந்தில் களமிறங்கினார் எம்எஸ் தோனி. வழக்கம்போல் தனது பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடி பினிஷ் கொடுத்தார். தோனி தனது இன்னிங்ஸில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை அடித்தார்.
மொயின் அலி, ரகானே கேமியோ
ஏழாவது பேட்ஸ்மேனாக ஆட்டத்தின் 12.2 ஓவரில் களமிறங்கினார் மொயின் அலி. ஆரம்பத்தில் ஜடேஜாவுடன் இணைந்து சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின்னர் ரவி பிஷ்னோய் வீசிய ஆட்டத்தின் 18வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டினார். அதே ஓவரில் நான்காவது சிக்ஸருக்கு முயற்சித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார்.
இவரை போல் ஓபனிங் பேட்ஸ்மேனாக பேட் செய்த ரகானேவும் 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் பொறுப்புடன் பேட் செய்து அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார் ரகானே.
ரச்சின் ரவீந்திரா, ரிஸ்வி ஏமாற்றம்
முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் கலக்கிய ரச்சின் ரவீந்திரா அதன் பின்னர் பெரிதாக சோபிக்கவில்லை. இதையடுத்து இந்த போட்டியிலும் அதை தொடர்ந்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதேபோல் ஆட்டத்தின் 11.1 ஓவரில் இம்பேக்ட் வீரராக சமி ரிஸ்வி களமிறக்கப்பட்டார். கைவசம் 9.5 ஓவர்கள் இருக்க அவர் தனது திறமையை நிருபிக்க நல்ல வாய்ப்பு அமைந்த போதிலும், அதை பயன்படுத்தாமல் போனார். ஒரு ரன் எடுத்து பாண்ட்யா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.
இவரை போல் ஷிவம் டூபேவும், அடித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடியில் 3 ரன்னில் ஸ்டோய்னிஸ் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிறப்பாக பேட் செய்து வந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடும் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.