PBKS vs RCB Result: நாக்அவுட்டான பஞ்சாப்! பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஆர்சிபிக்கு நான்காவது தொடர் வெற்றி
May 10, 2024, 11:44 PM IST
ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் விதமாக அமைந்த இந்த போட்டியில் பஞ்சாப் தோல்வியை தழுவியதுடன் வெளியேறியுள்ளது. முதலில் பேட்டிங் பின்னர் பவுலிங்கில் கலக்கியதுடன் நான்காவது தொடர் வெற்றியை பெற்றுள்ளது ஆர்சிபி அணி. பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஆர்சிபிக்கு இது நான்காவது தொடர் வெற்றியாக அமைந்தது.
ஐபிஎல் 2024 தொடரின் 58வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே தரம்சாலாவில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8வது இடத்திலும், ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 7வது இடத்திலும் இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா ஆகியோருக்கு பதிலாக வித்வீத் கவீரப்பா, லயாம் லிவிங்ஸ்ட்ன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற முதல் மோதலில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி பஞ்சாப், ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் போட்டியாக இருந்தது.
ஆர்சிபி அதிரடி
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 92, ராஜத் பட்டிதார் 55, கேமரூன் க்ரீன் 46 ரன்கள் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களில் ஹர்ஷல் படேல் 3, வித்வாத் கவீரப்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சாம் கரன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பஞ்சாப் சேஸிங்
242 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் 17 ஓவரில் 181 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் ஆர்சிபி 60 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது. அத்துடன் ப்ளேஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அணியாக ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்.
ஆர்சிபி பவுலர்களில் முகமது சிராஜ் 3, ஸ்வனில் சிங், லாக்கி பெர்குசன், கரன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ரோசவ் அதிரடி
பஞ்சாப் கிங்ஸ் ஓபனர் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னில் அவுட்டாகி விரைவாக வெளியேறினார். மற்றொரு ஓபனரான பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை தந்த போதிலும் நீண்ட நேரம் நிலைத்து நிற்காமல் 16 பந்துகளில் 27 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோசவ் தொடக்கம் முதல் பவுண்டரி, சிக்ஸர் என ஆர்சிபி பவுலர்கள் வெளுத்து வாங்கினார். அவருடன் சஷாங் சிங்கும் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். 21 பந்துகளில் அரைசமடித்த ரோசவ், 61 ரன்கள் அடித்து அவுட்டானார். அவர் தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்தார்.
சஷாங்க் சிங் ரன் அவுட்
அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த சஷாங் சிங், அணிக்கு தேவைப்படும் ரன் ரேட்டுக்கு ஏற்ப விளையாடி வந்தார். இதையடுத்து 19 பந்துகளில் 37 ரன்கள் அடித்த அவர், கோலியின் அற்புதமான த்ரேவால் துர்தஷ்டவசமாக ரன்அவுட்டானார். இதை ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
அவருடன் நன்றாக பேட் செய்து வந்த அணியின் கேப்டன் சாம் கரன் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசுடோஷ் ஷர்மா 8 ரன்னில் நடையை கட்டினார். மற்ற பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் பெரிதான பங்களிப்பை தரவில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.