தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kkr Vs Lsg Result: ஒன்மேன் ஷோ காட்டிய சால்ட்! லக்னோவை ஊதி தள்ளிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

KKR vs LSG Result: ஒன்மேன் ஷோ காட்டிய சால்ட்! லக்னோவை ஊதி தள்ளிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Apr 14, 2024, 07:08 PM IST

google News
லக்னோ பவுலர்களுக்கு எதிராக ஒன் மேன் ஷோ காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் பில் சால்ட் 89 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் லக்னோவுக்கு எதிராக எளிதான வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றது. (AP)
லக்னோ பவுலர்களுக்கு எதிராக ஒன் மேன் ஷோ காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் பில் சால்ட் 89 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் லக்னோவுக்கு எதிராக எளிதான வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றது.

லக்னோ பவுலர்களுக்கு எதிராக ஒன் மேன் ஷோ காட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓபனர் பில் சால்ட் 89 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். இவரது ஆட்டத்தால் லக்னோவுக்கு எதிராக எளிதான வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெற்றது.

ஐபிஎல் 2024 தொடரின் 29வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்தன.

கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், நவீன் உல் ஹக் ஆகியோருக்கு பதிலாக தீபக் ஹுடா, வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷமர் ஜோசப் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.

லக்னோ பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 45 , கேஎல் 39, ஆயுஷ் பதோனி 29 ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வைபவ் அரோரா, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கொல்கத்தா சேஸிங்

இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் விக்கெட் வித்தியாசத்தில் இந்த சீசனின் நான்காவது வெற்றியை பெற்றது.

கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் ஓபனர் பில் சால்ஸ் 89, ஷ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ பவுலர்களில் கட்டுப்பாடுடன் பந்து வீசிய மோக்சின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை