தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Csk Vs Gt: இரண்டாவது போட்டியிலேயே முக்கிய மாற்றம்! - தமிழக வீரர்கள் பவருடன் களமிறங்கும் குஜராத்

CSK vs GT: இரண்டாவது போட்டியிலேயே முக்கிய மாற்றம்! - தமிழக வீரர்கள் பவருடன் களமிறங்கும் குஜராத்

Mar 26, 2024, 07:32 PM IST

google News
இந்த சீசனில் தங்களது இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் விளையாடுகின்றன. அணியில் முக்கிய மாற்றத்தை சிஎஸ்கே கேப்டன் அதிரடி மேற்கொண்டுள்ளார். வழக்கத்தை விட புற்களுடன் காணப்படும் பிட்சில் சிஎஸ்கே அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார். (AFP)
இந்த சீசனில் தங்களது இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் விளையாடுகின்றன. அணியில் முக்கிய மாற்றத்தை சிஎஸ்கே கேப்டன் அதிரடி மேற்கொண்டுள்ளார். வழக்கத்தை விட புற்களுடன் காணப்படும் பிட்சில் சிஎஸ்கே அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சீசனில் தங்களது இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் விளையாடுகின்றன. அணியில் முக்கிய மாற்றத்தை சிஎஸ்கே கேப்டன் அதிரடி மேற்கொண்டுள்ளார். வழக்கத்தை விட புற்களுடன் காணப்படும் பிட்சில் சிஎஸ்கே அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2024 தொடரின் 7வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இது சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது உள்ளூர் போட்டியாக உள்ளது.

இந்த இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இரண்டாவது போட்டியில் களமிறங்குகின்றன. இந்த போட்டியில் வெற்றி பயணத்தை தொடரப்போவது யார், முதல் தோல்வியை பெறப்போவது யார் என்பது தெரியவரும்.

குஜராத் பவுலிங்

இதையடுத்து டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ஸ்பின்னர் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடுகிறது.

பிட்ச் நிலவரம்

சேப்பாக்கம் ஆடுகளம் புற்களுடன் இருப்பது அரிதான விஷயமாக உள்ளது. புற்களின் மேற்பரப்பில் சிறது சீரற்ற திட்டுகளும் இருக்கின்றன. எனவே ஆட்டம் தொடங்கி ஸ்பின் பவுலர்கள் பந்து வீச வந்த பிறகு பேட்ஸ்மேன்கள் ஆட்டம் காணலாம். முதலில் பேட் செய்யும் அணிக்கு சாதமான பிட்சாக இருக்கும் என மேத்யூ ஹெய்டன் கணித்துள்ளார்.

தமிழக வீரர்கள் பவருடன் குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கர், சாய் கிஷோர், சாய் சுதர்சன் என தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுகிறார்கள். இவர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஏராளமான போட்டிகள் விளையாடி இருப்பதால் அந்த அனுபவம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக வீரர்கள் பவருடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

பிட்ச் ஸ்பினுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியில் பிரதான ஸ்பின்னரான மகேஷ் தீக்‌ஷனா நீக்கி அதிரடியான முடிவை கேப்டன் ருதுராஜ் மேற்கொண்டுள்ளார். 

இருப்பினும் பிரதான 11 பேர் கொண்ட அணியில் பதிரனா இடம்பெறவில்லை. ஒரு வேலை பவுலிங்குக்கு ஒத்துழைக்கும் விதமாக பிட்ச் செயல்பட்டால் இம்பேக்ட் வீரர் லிஸ்டில் இருக்கும் மிட்செல் சாண்ட்னர் கூட விளையாடும் வாய்ப்பு உள்ளது

இரு அணிகளின் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்

இம்பேக்ட் வீரர்கள்: மதிஷா பதிரனா, ஷர்துல் தாக்கூர், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, மிட்செல் சாண்டனர்

குஜராத் டைட்ன்ஸ்: விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில் (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், டேவிட் மில்லர், விஜய் சங்கர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், சாய் கிஷோர், உமேஷ் யாதவ், மோகித் ஷர்மா, ஸ்பென்சர் ஜான்சான்

இம்பேக்ட் வீரர்கள்: சாய் சுதர்சன், பிஆர் சரத், அபினவ் மனோகர், மானவ் சுதர், நூர் அகமது

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி