HT Cricket Special: சன் ரைசர்ஸ், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள்! கெத்து காட்டிய ஜடேஜா, வார்னர்
May 29, 2024, 06:30 AM IST
சன் ரைசர்ஸ், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள் ஆக மே 29 உள்ளது. சன் ரைசர்ஸ் முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றதும், சிஎஸ்கே ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகி சாதித்தும் இதே நாளில் தான்
ஐபிஎல் வரலாற்றில் சில போட்டிகள் என்றும் மனதை விட்டு நீங்காமல் இருக்கும். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் அணி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத போட்டி இதே நாளில் நடந்த்துள்ளது. 2016 சீசனில் இதே மே 29 தேதியில் தான் சன் ரைசர்ஸ் முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
அதே போல் கடந்த 2023 சீசனில் இந்த நாளில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வென்று, அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தது.
சன் ரைசர்ஸ் அபாரம்
2013 சீசனில் இருந்து தான் சன் ரைசர்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கியது. தனது நான்காவது சீசனில் கப் அடித்த இந்த அணி, ஐபிஎல் வென்ற ஆறாவது அணி என்ற பெருமை பெற்றது.
ஆர்சிபி அணிக்கு எதிராக அதன் உள்ளூர் மைதானமான பெங்களூருவில் வைத்து வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இத்தனைக்கும் ஆர்சிபி அணியில் கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கேஎல் ராகுல், ஷேன் வாட்சன் என வலுவான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும், சிறப்பாக பவுலிங் செய்து கோப்பையை தன் வசம் ஆக்கியது சன் ரைசர்ஸ்.
அப்போது சன் ரைசர்ஸ் அணிக்கு கேப்டன் ஆக டேவிட் வார்னர் செய்யப்பட்டார். ஐபிஎல் கோப்பை வென்ற இரண்டவது வெளிநாட்டு கேப்டன் என்ற பெருமை பெற்றார்.
சிஎஸ்கே ஐந்தாவது முறையாக சாம்பியன்
ஏற்கனவே 2010, 2011 ஆகிய சீசன்களை அடுத்தடுத்து வென்ற சிஎஸ்கே அணி இரண்டு ஆண்டு தடைக்கு பின் come back இல் கோப்பை, பின்னர் 2021 இல் மீண்டும் சாம்பியன் என கலக்கியது.
இன்னும் ஒரு முறை கோப்பை வென்றால் அதிக ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை சமன் செய்யலாம் என்ற நிலை இருந்ததது. அதை சிஎஸ்கே செய்தும் காட்டியது.
மறக்க முடியுமா ஜடேஜா பவுண்டரி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதன் உள்ளூர் மைதானத்தில் வென்று சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே.
வழக்கமாக தோனியை மையப்படுத்தி, அவரது பினிஷிங்கை நம்பி இருக்கும் சிஎஸ்கே ஆட்டம் இந்த போட்டியில் மாறுபட்டு இருந்ததது.
செல்லப்போனால் தோனி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ஆட்டத்தின் கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட, ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து, தோனி செய்யும் வேலையை கச்சிதமாக செய்து கெத்து காட்டினார் ஜடேஜா.
குறிப்பாக கடைசி பந்தில் அவர் அடித்த வின்னிங் ஷாட்டாக அமைந்த பவுண்டரி ஐபிஎல் வரலாற்றில் சிறந்த ஷாட் மற்றும் பினிஷிங் ஆக மாறியுள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இரண்டு முக்கிய போட்டிகள் நடந்த நாள் ஆக மே 29 அமைந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.