KKR vs LSG Innings Break: அதிரடி காட்டிய பூரான்! லக்னோ பேட்ஸ்மேன்கள் பவுலிங்கில் மிரட்டிய ஸ்டார்க்
Apr 14, 2024, 05:41 PM IST
கேஎல் ராகுல் - ஆயுஷ் பதோனி பார்ட்னர்ஷிப், நிக்கோலஸ் பூரான் அதிரடியின் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 161 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 29வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
கொல்கத்தா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், நவீன் உல் ஹக் ஆகியோருக்கு பதிலாக தீபக் ஹுடா, வெஸ்ட் இண்டீஸ் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷமர் ஜோசப் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறார்.
கொல்கத்தா பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 45 , கேஎல் 39, ஆயுஷ் பதோனி 29 ரன்கள் அடித்துள்ளனர்.
கொல்கத்தா பவுலர்களில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வைபவ் அரோரா, சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
கேஎல் ராகுல் - ஆயுஷ் பதோனி பார்ட்னர்ஷிப்
பார்ம் இல்லாமல் தவித்து வரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஓபனரான குவண்டைன் டி காக் 10 ரன்னில் வெளியேறினார். இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த தீபக் ஹூடா 8 ரன்னில் பெவிலியின் திரும்பினார். இவர்கள் இருவரும் பவர்ப்ளே முடிவதற்குள் அவுட்டான நிலையில் லக்னோ அணிக்கு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது.
அதை அணியின் கேப்டன் கேஎல் ராகுல் - ஆயுஷ் பதோனி ஆகியோர் சிறப்பாக செய்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தனர். கேஎல் ராகுல் 27 பந்துகளில் 39 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த ஸ்டோய்னிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
நிக்கோலஸ் பூரான் அதிரடி
ஒரு புறம் ஆயுஷ் பதோனி பொறுமையாக ரன் குவித்து வர, நிக்கோலஸ் பூரான் டாப் கியரில் விளையாடினார். அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
பதோன் 27 பந்துகளில் 29 ரன்கள் அடித்து வீழ்ந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவர் வரை விளையாடிய பூரான் 32 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஸ்டார்க் வசம் வீழ்ந்தார்.
ஸ்டார்க், நரேன் அபாரம்
கொல்கத்தா பவுலர்களில் ஸ்டார்க், சுனில் நரேன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். லக்னோ பேட்ஸ்மேன்களை திணறடித்த ஸ்டார்க் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுனில் நரேன் 4 ஓவரில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.