தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Lsg Vs Pbks Result: ஓபனிங் சரியாக அமைந்தும் பினிஷிங் சரி இல்லாமல் போன பஞ்சாப்! உள்ளூரில் முதல் வெற்றியை ருசித்த லக்னோ

LSG vs PBKS Result: ஓபனிங் சரியாக அமைந்தும் பினிஷிங் சரி இல்லாமல் போன பஞ்சாப்! உள்ளூரில் முதல் வெற்றியை ருசித்த லக்னோ

Mar 31, 2024, 12:03 AM IST

google News
பஞ்சாப் அணிக்கு ஓபனிங் சிறப்பாக அமைந்தபோதிலும் பினிஷிங் அமையாமல் போக லக்னோவுக்கு எதிராக 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. (AFP)
பஞ்சாப் அணிக்கு ஓபனிங் சிறப்பாக அமைந்தபோதிலும் பினிஷிங் அமையாமல் போக லக்னோவுக்கு எதிராக 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு ஓபனிங் சிறப்பாக அமைந்தபோதிலும் பினிஷிங் அமையாமல் போக லக்னோவுக்கு எதிராக 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 11வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே லக்னோ ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு முதல் உள்ளூர் போட்டியாக இது அமைந்தது.

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரான் கேப்டனாக செயல்பட்டார். அதேபோல் கேஎல் ராகுல் இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். சமீபத்தில் தான் காயத்தில் இருந்து குணமடைந்து கேஎல் ராகுல் வந்திருப்பதால், அவரது பணியை எளிதாக்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பாத நிக்கோலஸ் பூரான் தெரிவித்தார். லக்னோ அணியில் யஷ் தாக்கூருக்கு பதிலாக சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் விளையாடுகிறது.

லக்னோ பேட்டிங்

டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குவன்டைன் டி காக் 54, க்ருணால் பாண்ட்யா 43, நிக்கோலஸ் பூரான் 42, லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் பவுலர்களில் சாம் கரன் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, ராகுல் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பஞ்சாப் சேஸிங்

பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுக்கும் ஆடுகளமாக இருந்து வரும் லக்னோ மைதனாத்தில் சேஸிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி, இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.

பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் ஷிகர் தவான் 70, பேர்ஸ்டோ 42, லியாம் லிவிங்ஸ்டன் 27 ரன்கள் எடுத்தனர். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மயங்க் யாதவ் 3, மோக்சின் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பஞ்சாப் நல்ல தொடக்கம்

பஞ்சாப் கிங்ஸ் ஓபனர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய பேர்ஸ்டோ லக்னோவுக்க எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் 42 ரன்கள் அடித்த பின்னர் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளை விளாசினார்.

மறுமுணையில் சிறப்பாக பேட் செய்து வந்த தவான் அரைசதமடித்தார்.

தடுமாறிய பேட்டிங் வரிசை

பேர்ஸ்டோவுக்கு பின்னர் பேட் செய்ய வந்த இம்பேக்ட் வீரர் பிரப்சிம்ரன் சிங் 7 பந்துகளில் விரைவாக 19 ரன்கள் அடித்துவிட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜித்தேஷ் ஷர்மா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

சிறப்பாக பேட் செய்து வந்த தவானும் 70 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து சாம் கரனும் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் பேட்டிங் வரிசை தடுமாறியது. இதனால் தேவைப்படும் ரன் ரேட்டும் அதிகரித்து.

லிவங்ஸ்டன் அதிரடி

கடைசி கட்டத்தில் லிவிங்ஸ்டன் மட்டும் இருந்த நிலையில் அழர் கொஞ்சம் அதிரடி காட்டினார். ஆனால் லக்னோவின் வெற்றி உறுதியாகவிட்ட நிலையில் அவரது அதிரடியும் பலன் அளிக்காமல் போனது.

பஞ்சாப் அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்து, தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி