LSG vs CSK Result: சிஎஸ்கேவிடம் வெற்றியை பறித்த கேஎல் ராகுல், டி காக்! இரண்டு தொடர் தோல்விக்கு பின் லக்னோ கம்பேக்
Apr 20, 2024, 01:20 AM IST
இரண்டு தொடர் தோல்விக்கு பின்னர் உள்ளூர் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. முதலில் பவுலிங், பின்னர் பேட்டிங்கில் சிஎஸ்கேவை விட சிறப்பாக செயல்பட்டது.
இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஷமர் ஜோசப்புக்கு பதிலாக மேட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல் ஆகியோருக்கு பதிலாக தீபக் சஹார், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிஎஸ்கே ரன்குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா , அஜிங்கியா ரகானோ 36, மொயின் அலி 30, மஎம்எஸ் தோனி 28 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ பவுலர்களில் க்ருணால் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்கஸ் ஸ்டொய்னிஸ், யஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், மோக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
லக்னோ சேஸிங்
177 ரன்கள் இலக்கை சேஸ் செய்த லக்னோ 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்த சீசனின் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 82, குவன்டைன் டி காக் 54 ரன்கள் எடுத்தனர்.
சிஎஸ்கே பவுலர்களில் முஸ்தபிசுர் ரஹ்மான், பதிரனா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். சிஎஸ்கே அணிக்கு இது மூன்றாவது தோல்வியாக அமைந்துள்ளது.
கேஎல் ராகுல் - டி காக் பார்ட்னர்ஷிப்
லக்னோ அணி ஓபனர்களான கேஎல் ராகுல் - டி காக் மிக பெரிய இலக்கை விரட்ட வேண்டும் என்பதால் தொடகத்தில் இருந்து ரன் குவிப்பில் ஈடுபட தொடங்கினர். அதேசமயம் கிடைக்கும் நல்ல பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பொறுப்புடன் பேட் செய்து இருவரும் அரைசதத்தை பூர்த்தி செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் 134 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக பேட் செய்து வந்த டி காக் 43 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் அவுட்டானார்.
முன்னதாக, ஜடேஜா வீசிய ஆட்டத்தின் 8வது ஓவர் இரண்டாவது பந்தில் டி காக் அடித்த பந்து எட்ஜ் ஆகி கேட்சி கிடைத்தது. இந்த வாய்ப்பை நழுவவிட்டார் பதிரனா. அப்போது டி காக் 31 ரன்கள் தான் எடுத்திருந்தார். பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திய அவர் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சொதப்பி வந்த நிலையில், தற்போது பார்முக்கு திரும்பியுள்ளார்.
டி காக் அவுட்டான பின்னர் அதிரடி மோடுக்கு மாறிய கேஎல் ராகுல் சிக்ஸர்களை காட்டிலும் பவுண்டரிகள் அடிப்பதில் மும்முரம் காட்டினார். 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்த அவர் பதிரனா பந்தில் ஜடேஜாவின் அற்புத கேட்சில் பிடிபட்டார்.
லக்னோ வெற்றி
கேஎல் ராகுல் அவுட்டானபோது அணியின் வெற்றிக்கு 16 பந்துகளில் 16 ரன்களே தேவைப்பட்டன. அப்போது களத்தில் இருந்த பூரான், புதிய பேட்ஸ்மேனாக வந்த ஸ்டோய்னிஸ் ஆகியோர் ஒரு ஓவர் மீதமிருக்க இலக்கை எட்டினார். இதனால் தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்த லக்னோ தற்போது வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
அதேபோல் சிஎஸ்கே இரண்டு தொடர் வெற்றிகளுக்கு பிறகு தோல்வியை சந்தித்துள்ளது.
மொத்தமுள்ள 14 போட்டிகளில் 7 போட்டிகள் விளையாடியிருக்கும் சிஎஸ்கே 4 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணியும் 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியை சந்தித்து நான்காவது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.