தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kkr Vs Rcb Innings Break: ஆர்சிபி பவுலர்கள் திட்டத்தை தவிடுபொடி ஆக்கிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்! அதிரடி ரன் வேட்டை

KKR vs RCB Innings Break: ஆர்சிபி பவுலர்கள் திட்டத்தை தவிடுபொடி ஆக்கிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்! அதிரடி ரன் வேட்டை

Apr 22, 2024, 10:00 AM IST

google News
ஓபனிங்கில் சால்ட், மிடில் ஓவர்களில் ஷ்ரேயாஸ், கடைசி கட்ட பினிஷிங்கில் ரசல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் என கூட்டணி அமைத்து ஆர்சிபி பவுலர்களை அடித்து துவம்சம் செய்தனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 222 ரன்கள் குவித்துள்ளது. (PTI)
ஓபனிங்கில் சால்ட், மிடில் ஓவர்களில் ஷ்ரேயாஸ், கடைசி கட்ட பினிஷிங்கில் ரசல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் என கூட்டணி அமைத்து ஆர்சிபி பவுலர்களை அடித்து துவம்சம் செய்தனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 222 ரன்கள் குவித்துள்ளது.

ஓபனிங்கில் சால்ட், மிடில் ஓவர்களில் ஷ்ரேயாஸ், கடைசி கட்ட பினிஷிங்கில் ரசல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங் என கூட்டணி அமைத்து ஆர்சிபி பவுலர்களை அடித்து துவம்சம் செய்தனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 222 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 36வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கு முன் கொல்கத்தா 6 போட்டிகளில் 4 வெற்றியுடன் 3வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 7 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் முதல் இடத்திலும் இருந்து வருகிறது.

இந்த போட்டி மாலை நேர போட்டியாக 3.30 மணிக்கு தொடங்கியுள்ளது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் பழிதீர்க்க வேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 50, பில் சால்ட் 48, ஆண்ட்ரே ரசல் 27, ரமன்தீப் சிங் 24 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலிங்கில் யஷ் தயாள், கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். லாக்கி பெர்குசன், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

ஸ்பின்னரான கரன் ஷர்மா விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் அவர் தான் குறைவான ரன்களை விட்டுக்கொடுத்தார். 4 ஓவரில் 33 ரன்கள் கரன் ஷர்மா ஓவரில் அடிக்கப்பட்டன.

சால்ட் அதிரடி

கொல்கத்த ஓபனரான பில் சால்ட் அதிரடியான தொடக்கத்தை தந்தார். 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்த அவர் 14 பந்துகளில் 48 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு ஓபனரான சுனில் நரேனை அதிரடியாக பேட் செய்ய விடாமல் ஆர்சிபி பவுலர்கள் நன்கு கட்டுப்படுத்தினர். அவர் 15 பந்துகளில் 10 ரன் எடுத்து அவுட்டானார்.

ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரகுவன்ஷி 3, வெங்கடேஷ் ஐயர் 16 ரன்களில் அவுட்டானார்கள். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பொறுப்புடன் பேட் செய்தார். விக்கெட் சரிவை தடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் அரைசதமடித்தார். 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ரிங்கு சிங், ரசல், ரமன்தீப் சிங் பினிஷ்

கடைசிகட்ட ஓவர்களில் ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங் ஆகியோர் அதிரடியாக பேட் செய்தனர். ரிங்கு சிங் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரசல் 27, ரமன்தீப் சிங் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை