தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Srh Vs Rcb Innings Break: கோலி, பட்டிதார் பொறுப்பான பேட்டிங்! சன் ரைசர்ஸ் கோட்டையில் அதிரடி காட்டிய ஆர்சிபி

SRH vs RCB Innings Break: கோலி, பட்டிதார் பொறுப்பான பேட்டிங்! சன் ரைசர்ஸ் கோட்டையில் அதிரடி காட்டிய ஆர்சிபி

Apr 26, 2024, 01:37 AM IST

google News
கோலி, ராஜத் பட்டிதார் ஆகியோர் பொறுப்புடன் பேட் செய்து அரைசதமடித்தனர். கேமரூன் க்ரீன் கடைசி வரை அவுட்டாகாமல் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவர் ஆர்சிபி பவுலர்கள் வெளுத்து வாங்கியுள்ளனர். (AP)
கோலி, ராஜத் பட்டிதார் ஆகியோர் பொறுப்புடன் பேட் செய்து அரைசதமடித்தனர். கேமரூன் க்ரீன் கடைசி வரை அவுட்டாகாமல் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவர் ஆர்சிபி பவுலர்கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.

கோலி, ராஜத் பட்டிதார் ஆகியோர் பொறுப்புடன் பேட் செய்து அரைசதமடித்தனர். கேமரூன் க்ரீன் கடைசி வரை அவுட்டாகாமல் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவர் ஆர்சிபி பவுலர்கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.

ஐபிஎல் 2024 தொடரின் 41வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றும் 10வது இடத்தில் உள்ளது. எனவே ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது அமைந்துள்ளது.

ஆர்சிபி பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக விராட் கோலி 51, ராஜத் பட்டிதார் 50, கேமரூன் க்ரீன் 36, டூ பிளெசிஸ் 25 ரன்கள் எடுத்துள்ளனர்.

சன் ரைசர்ஸ் பவுலர்களில் ஜெயதேவ் உனத்கட் 3, நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மயங்க் மார்கண்டே, பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கோலி - பட்டிதார் பொறுப்பான பேட்டிங் 

ஆர்சிபி கேப்டன் டூ பிளெசிஸ் ஓபனிங்கில் களமிறங்கி வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை தந்த 25 ரன்கள் எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். இவரை தொடர்ந்து வில் ஜேக்ஸ் 6 ரன்னில் நடையை கட்டினார்.

தொடக்கத்தில் டூ பிளெசிஸ் உடன் அதிரடி காட்டிய கோலி, பின்னர் பொறுப்பாக பேட் செய்தார். ராஜத் பட்டிதாருடன் பார்டனர்ஷிப் அமைத்தார்.

தனது அரைசத்ததை பூர்த்தி செய்த கோலி 51 ரன்களில் அவுட்டானார். ஒரு புறம் கோலி நிதானமாக பேட் செய்ய, அதிரடி மோடில் விளையாடி பட்டிதார் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்த பின்பு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

கோலி - பட்டிதார் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர்.

க்ரீன் கேமியோ ஆட்டம்

இந்த சீசனில் பெரிதாக பங்களிப்பை அளித்து வராமல் இருந்து வந்த கேமரூன் க்ரீன், கடைசி வரை பேட் செய்து 20 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். 

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஸ்வம்னில் சிங் 12, தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் அடித்தனர்

பவுலிங்கில் கலக்கிய இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள்

சன் ரைசர்ஸ் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களான ஜெயதேவ் உனத்கட், நடராஜன் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்தனர். உனத்கட் 4 ஓவரில் 30 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நடராஜன் 4 ஓவரில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்

கேப்டன் பேட் கம்மின்ஸ் ஓவரை அடித்து துவைத்தனர் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள். 4 ஓவரில் அவர் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இருப்பினும் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை