தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ravindra Jadeja: மாற்றத்துக்கான நேரம்..! இனி ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாது - பக்கா பிளானில் பிசிசிஐ

Ravindra Jadeja: மாற்றத்துக்கான நேரம்..! இனி ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாது - பக்கா பிளானில் பிசிசிஐ

Jul 19, 2024, 05:51 PM IST

google News
இனி ஆல்ரவுண்டர் ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாத விதமாக பக்கா பிளானில் உள்ளது பிசிசிஐ. மாற்றத்துக்கான நேரம் இது என இலங்கைக்கு எதிரான தொடரில் ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து கருத்தும் வெளியாகியுள்ளது. (Surjeet Yadav)
இனி ஆல்ரவுண்டர் ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாத விதமாக பக்கா பிளானில் உள்ளது பிசிசிஐ. மாற்றத்துக்கான நேரம் இது என இலங்கைக்கு எதிரான தொடரில் ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து கருத்தும் வெளியாகியுள்ளது.

இனி ஆல்ரவுண்டர் ஜடேஜாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் பார்க்க முடியாத விதமாக பக்கா பிளானில் உள்ளது பிசிசிஐ. மாற்றத்துக்கான நேரம் இது என இலங்கைக்கு எதிரான தொடரில் ஜடேஜா சேர்க்கப்படாதது குறித்து கருத்தும் வெளியாகியுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, அநேகமாக இனி ஒரு நாள் அணியில் சேர்க்கப்படுவரா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய அணியின் ஸ்டார் ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஜடேஜா, நடந்து முடிந்து டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரை பின் தொடர்ந்து தனது ஓய்வை அறிவித்தார்.

இருப்பினும் எதிர்வரும் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. இவரை போல் மற்றொரு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்படவில்லை. அதேவேலையில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் இந்த தொடரில் இல்லை.

இந்த சூழ்நிலையில் பும்ராவுக்கு பணிச்சுமையை குறைக்கும் விதமாக ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும், தனிப்பட்ட காரணங்களுக்காக பாண்டியா பிரேக் தேவை என கேட்டுக்கொண்டதால் சேர்க்கப்படவில்லை என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஜடேஜா விஷயத்தில் பிசிசிஐ முக்கிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்கால அணியை உருவாக்கும் திட்டம்

ஜடேஜாவின் ஆட்டத்தில் தவறும் இல்லை. ஆனாலும் எதிர்காலத்துக்கான அணியை உருவாக்க வேண்டியிருப்பதால் அணி நிர்வாகம் மற்ற வாய்ப்புகளை முயற்சித்து பார்க்க விரும்புகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னர் இந்த இலங்கை தொடரையும் சேர்த்து இந்தியா 6 ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாட இருக்கிறது. எனவே ஜடேஜாவுக்கு மாற்றாக அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஒரு சில ஆட்டங்களை பார்க்கவும், திறமையை பயன்படுத்த தேர்வாளர்கள் விரும்புகிறார்கள் என ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து பிசிசிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய ஆல்ரவுண்டர்

கடந்த ஒரு தசாப்தங்களாக அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்து வந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. 2009ஆம் ஆண்டில் அவர் அறிமுகமானதில் இருந்து இந்தியா 354 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஜடேஜா 197 போட்டிகளில், அதாவது 55.6 சதவீதம் ஆட்டங்களில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார். காயத்தால் விலகியது, பணிச்சுமை காரணமாக எடுத்த பிரேக் தவிர லெவன்களில் இடம்பெறும் முக்கிய வீரராக இருந்துள்ளார்.

இது மாற்றத்துக்கான நேரம்

ஜடேஜா போல் அனைத்து வித சூழ்நிலைகளிலும் விளையாடக்கூடிய வீரராக அக்சர் படேல் இருப்பார் என அணி நிர்வாகம் நம்புகிறது. அதேபோல் வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது ஆகியோரின் மீது நம்பிக்கை வைக்கப்ப்டுள்ளது.

வாஷிங்டன் சுந்தர் தனது பிட்னஸை சரியாக பராமரிப்பதன் மூலம் ஜடேஜாவுக்கு பொருத்தமான மாற்றாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இருப்பார் என்பதால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மாற்றத்துக்கு இதுவே சரியான நேரம் என அணி நிர்வாகம் கருதியுள்ளதாக கூறப்படுகிறது.

டெஸ்ட் அணியில் ஜடேஜா

இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜா முக்கிய வீரராக இருப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. எனவே எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஸ்பின் ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இப்படிதான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். தற்போது இந்த நிலைமை ஜடேஜாவுக்கும் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி