GT vs CSK Preview: கட்டாய வெற்றி தேவையான நிலையில் குஜராத்.. ரேஸில் இருக்க சிஎஸ்கேவுக்குக் காத்திருக்கும் சவால்!
May 10, 2024, 06:10 AM IST
GT vs CSK Preview: குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மே 10ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் குஜராத் கடைசி இடத்திலும், சென்னை 4 இடத்திலும் உள்ளது. இந்த மேட்ச் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி), நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை (சிஎஸ்கே) மே 10ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. 11 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஜிடி கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே 11 ஆட்டங்களில் ஆறில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சென்னை அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.
ஜிடி மற்றும் சிஎஸ்கே அணிகள் கடைசியாக இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி மோதின. சிஎஸ்கே அணி 206/6 என்ற இலக்கை ஜிடிக்கு நிர்ணயித்தது. சென்னையின் சிவம் துபே 23 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். சேஸிங் செய்ய முடியாத டைட்டன்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
GT vs CSK பிட்ச் ரிப்போர்ட்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் சமமான நன்மைகளை அனுபவிக்கின்றனர். இந்த மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் 2024 ஆட்டம் அதிக ரன்கள் குவித்த போட்டியாக அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த ஜிடி 200/3 ரன்கள் எடுத்தது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
GT vs CSK வானிலை
மாலையில் அகமதாபாத்தில் வெப்பநிலை சுமார் 33 C ஆக இருக்கும். உண்மையான உணர்வு 34 C ஆக இருக்கும். ஈரப்பதம் சுமார் 41% இருக்கும். மழைக்கு வாய்ப்பே இல்லை.
GT vs CSK வெற்றிக் கணிப்பு
கூகுளின் வெற்றி நிகழ்தகவின் படி, சென்னை தனது 12வது போட்டியில் குஜராத்தை வீழ்த்த 57% வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுமே சளைத்தது இல்லை என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
ஐபிஎல் 2024
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 17வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. 2008ல் தொடங்கிய இந்த மெகா லீக், ஏற்கனவே 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 8 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக்கில் தற்போது பத்து அணிகள் பங்கேற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் 2022ல் அறிமுகமாகின. கடந்த இரண்டு சீசன்களில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று அறியப்படுகிறது. இந்த மெகா லீக் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
டாபிக்ஸ்