தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

Karthikeyan S HT Tamil
May 08, 2024 07:55 AM IST

Weather Update, Chennai Rain: கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (மே 8) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

8 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை

நாளை (மே 9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடுஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மிதமான மழைக்கு வாய்ப்பு

மே 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை அதிகரிக்கும்

இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை4 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி பாரன்ஹீட் வரைபடிப்படியாக குறையும். மே 8 முதல் 11ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 37.4 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.

இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரைகாற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55 சதவீதமாகவும் மற்ற நேரங்களில் 50-85 சதவீதமாகவும் கடலோரப்பகுதிகளில் 55-85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்." இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை

சென்னையில் அடையாறு, மைலாப்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தாம்பரம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், அசோக் நகர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்