தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ipl 2023 Most Centuries: கடந்த 2023 ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டியில் அதிக சதத்தை பதிவு செய்தது யார்?

IPL 2023 Most Centuries: கடந்த 2023 ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டியில் அதிக சதத்தை பதிவு செய்தது யார்?

Manigandan K T HT Tamil

Mar 12, 2024, 06:00 AM IST

google News
IPL 2023 Record: ஐபிஎல் கிரிக்கெட்டில் 2020இல் அறிமுகமானவர் என்றாலும் கடந்த ஆண்டு தான் தனது அதிரடி ஆட்டத்தால் பேமஸ் ஆனார் எனலாம். இவர் கடந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, 625 ரன்களை அடித்தார். 1 சதமும், 5 அரை சதமும் அடித்தார். 82 ஃபோர்ஸ், 26 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார். (HT)
IPL 2023 Record: ஐபிஎல் கிரிக்கெட்டில் 2020இல் அறிமுகமானவர் என்றாலும் கடந்த ஆண்டு தான் தனது அதிரடி ஆட்டத்தால் பேமஸ் ஆனார் எனலாம். இவர் கடந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, 625 ரன்களை அடித்தார். 1 சதமும், 5 அரை சதமும் அடித்தார். 82 ஃபோர்ஸ், 26 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார்.

IPL 2023 Record: ஐபிஎல் கிரிக்கெட்டில் 2020இல் அறிமுகமானவர் என்றாலும் கடந்த ஆண்டு தான் தனது அதிரடி ஆட்டத்தால் பேமஸ் ஆனார் எனலாம். இவர் கடந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, 625 ரன்களை அடித்தார். 1 சதமும், 5 அரை சதமும் அடித்தார். 82 ஃபோர்ஸ், 26 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார்.

கடந்த 2023 ஐபிஎல் சீசனில் அதிக சதங்களை விளாசியவர்களின் லிஸ்ட்டை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

சுப்மன் கில்

இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் சுப்மன் கில்.

ஐபிஎல் தான் சுப்மன் கில்லுக்கு பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம். மிகச் சிறந்த திறமைசாலியாக அடையாளம் காட்டிய ஐபிஎல் கிரிக்கெட்டில் அனல் பறக்க கில்லியாக விளையாடுவதில் பெயர் போனவர் கில். கடந்த சீசனில் அதிரடி காட்ட தவறவில்லை. 17 ஆட்டங்களில் ஆடிய அவர், 890 ரன்களை குவித்தார். 2வது வரிசையில் களமிறங்கிய அவர், ஓர் ஆட்டத்தில் 129 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். மொத்தம் 33 சிக்ஸர்களை விளாசி அசத்திய கில், 85 ஃபோர்ஸை அடித்திருக்கிறார். இவர் மொத்தம் 3 சதங்களை பதிவு செய்திருக்கிறார். அரை சதங்கள் 4.

விராட் கோலி

ஆர்சிபி வீரர் விராட் கோலி, மொத்தம் 2 சதங்களை பதிவு செய்திருக்கிறார். மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோலி, 639 ரன்களை விளாசியிருக்கிறார். இவரது அதிகபட்சம் 101 நாட் அவுட். ஸ்டிரைக் ரேட் 139.82. விராட் கோலி விஸ்வரூபம் எடுத்து ஆடாமல் இருந்தால் தானே ஆச்சரியம். இந்த வருடமும் பொளந்துகட்டுவார் என நம்பலாம்.

ஹென்றிச் கிளாசன்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஹென்றிச் கிளாசன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த விளையாடினார். இவர் மொத்தம் 12 ஆட்டங்களில் ஆடி, 448 ரன்களை குவித்துள்ளார். இவர் ஒரு சதம் பதிவு செய்தார். 2 அரை சதங்களை அடித்திருக்கிறார். ஃபோர்ஸ் மட்டும் 32. சிக்ஸர்கள் 25 பறக்கவிட்டுள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 177.07.

ஹாரி ப்ரூக்

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி ப்ரூக் கடந்த ஆண்டு தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர், 1 சதம் பதிவு செய்தார். 11 ஆட்டங்களில் விளையாடிய அவர், 190 ரன்கள் அடித்திருக்கிறார். இவரது ஸ்டிரைக் ரேட் 123.37.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஐபிஎல் கிரிக்கெட்டில் 2020இல் அறிமுகமானவர் என்றாலும் கடந்த ஆண்டு தான் தனது அதிரடி ஆட்டத்தால் பேமஸ் ஆனார் எனலாம். இவர் கடந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, 625 ரன்களை அடித்தார். 1 சதமும், 5 அரை சதமும் அடித்தார். 82 ஃபோர்ஸ், 26 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) (ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக டாடா ஐபிஎல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆண்கள் டுவென்டி 20 (டி20) கிரிக்கெட் லீக் ஆகும். 2007 இல் BCCI ஆல் நிறுவப்பட்ட IPL லீக், 10 நகரங்களின் அடிப்படையிலான உரிமையுடைய அணிகளால் போட்டியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை காலத்தில் ஐபிஎல் நடத்தப்படுவது வழக்கம். இது ஐசிசி ஃபியூச்சர் டூர்ஸ் திட்டத்தில் ஒரு பிரத்யேக சாளரத்தைக் கொண்டுள்ளது, அதாவது ஐபிஎல் சீசன்களில் குறைவான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்.

ஐபிஎல் உலகிலேயே மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் ஆகும். 2014 இல், அனைத்து விளையாட்டு லீக்குகளிலும் சராசரி வருகையால் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2010 இல், ஐபிஎல் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதல் விளையாட்டு நிகழ்வானது. ஐபிஎல் கிரிக்கெட்டைக் காண ரசிகர்கள் தவம் கிடப்பார்கள் என்றால் அது மிகையல்ல. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் ரசிகர்கள் டிவி முன்னால் அமர்ந்து முழு போட்டியை ரசிப்பார்கள்.

இதுவெறும் கிரிக்கெட் போட்டி அல்ல, இதுவொரு திருவிழா. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஐபிஎல் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த அணியின் வீரர்கள் சரியாக விளையாடினால் கொண்டாடவும், சரியாக விளையாடவில்லை என்றால் உரிமையுடன் திட்டவும் செய்வார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி