IPL 2023 Most Fifties: ஐபிஎல் 2023 சீசனில் அதிக அரை சதங்களை விளாசிய வீரர்கள் 5 பேர் யார் யார்னு பாருங்க!
IPL Records: லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர். இவர் மொத்தம் 6 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 516 ரன்களை அடித்தார். இவரது அதிகபட்சம் 86 ரன்கள். ஸ்டிரைக் ரேட் 131.63 ஆகும்.

ஃபாப் டு பிளெசிஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் (HT)
கடந்த ஐபிஎல் சீசனில் அதிக அரை சதங்களை விளாசியவர்களின் லிஸ்ட்டை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
ஃபாப் டு பிளெசிஸ்
கடந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய ஃபாப் டு பிளெசிஸ் தான் அதிக அரை சதங்களை கடந்த சீசனில் பதிவு செய்துள்ளார். மொத்தம் 8 அரை சதங்களை அவர் பதிவு செய்திருக்கிறார். இவர் 14 ஆட்டங்களில் விளையாடி 730 ரன்களை குவித்தார். அதில் அதிகபட்சம் ஓர் ஆட்டத்தில் 84 ஆகும். மொத்தம் 36 சிக்ஸர்களை அவர் பறக்க விட்டார். ஃபோர்ஸ் 60 ஐ விரட்டினார். இவரது ஸ்டிரைக் ரேட் 153.68 ஆக இருந்தது.
டேவிட் வார்னர்
லிஸ்டில் அடுத்த இடத்தில் இருப்பவர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் டேவிட் வார்னர். இவர் மொத்தம் 6 அரை சதங்களைப் பதிவு செய்துள்ளார். மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 516 ரன்களை அடித்தார். இவரது அதிகபட்சம் 86 ரன்கள். ஸ்டிரைக் ரேட் 131.63 ஆகும்.