தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஒற்றை கையில் கெத்து கேட்ச் பிடித்த ஹர்மன்பிரீத்.. பேட்டிங்கில் சாதனை புரிந்த மந்தனா! இந்திய மகளிர் மிக பெரிய வெற்றி

ஒற்றை கையில் கெத்து கேட்ச் பிடித்த ஹர்மன்பிரீத்.. பேட்டிங்கில் சாதனை புரிந்த மந்தனா! இந்திய மகளிர் மிக பெரிய வெற்றி

Dec 22, 2024, 09:22 PM IST

google News
ரேணுகா சிங் துல்லிய பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பேட்டர்கள் சீட்டுகட்டு போல் சரிந்தனர். மிக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இந்திய மகளிர் சாதனை புரிந்துள்ளது.
ரேணுகா சிங் துல்லிய பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பேட்டர்கள் சீட்டுகட்டு போல் சரிந்தனர். மிக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இந்திய மகளிர் சாதனை புரிந்துள்ளது.

ரேணுகா சிங் துல்லிய பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பேட்டர்கள் சீட்டுகட்டு போல் சரிந்தனர். மிக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இந்திய மகளிர் சாதனை புரிந்துள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் வெஸ்ட்இண்டீஸ் மகளிர் அணி, இந்திய மகளிர் அணிக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இன்று வதோத்ராவில் நடைபெற்றது.

இந்திய மகளிர் மிரட்டல் அடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. இந்திய மகளிர் அணியில் ஓபனர் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். ஹர்லீன் தியோல் 44. பிரதிகா ராவல் 4, ஹர்மன்ப்ரீத் கெளர் 34, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 31 ரன்கள் எடுத்தனர்.

ரேணுகா சிங் மிரட்டல் பவுலிங்

இதன் பின்னர் 315 ரன்கள் என்ற கடினமான இலக்கை சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 26.2 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் இந்திய மகளிர் 211 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மகளிர் அணி சாதித்துள்ளது

இந்திய மகளிர் பவுலிங்கில் மிரட்டலாக பந்து வீசிய ரேணுகா சிங் 10 ஓவரில், ஒரு மெய்டன், 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரது துல்லியமான பவுலிங்கில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியின் பேட்டர்கள் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து பெவிலியன் சென்றனர். 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரேணுகா சிங் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய மகளிர் டாப் ஆர்டர் கலக்கல் பேட்டிங்

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய மகளிர் அணிக்கு சிறப்பானதொரு ஓபனிங்கை தொடக்க பேட்டர்கள் மந்தனா - பிரதிகா ராவல் ஆகியோர் தந்தனர். இருவரும் இணைந்து 110 ரன்கள் சேர்த்தனர். அதேபோல் மற்ற டாப் ஆர்டர் பேட்டர்களும் பொறுப்புடன் பேட் செய்து கணிசமான ரன்களை குவித்தனர்.

அதிரடியாக பேட் செய்த ரிச்சா கோஷ், 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதேபோல் ரோட்ரிக்ஸ் 19 பந்துகளில் 31 ரன்கள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 23 பந்துகளில் 3 ரன்களும் எடுத்தனர். இவர்களின் கேமியோ ஆட்டத்தால் இந்தியாவுக்கு நல்ல பினிஷிங் அமைந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது இந்திய மகளிர் 1-0 என்ற முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி 24ஆம் தேதி வதோத்ராவில் நடைபெற இருக்கிறது

அசத்தல் கேட்ச் பிடித்த ஹர்மன்ப்ரீத் கெளர்

ஆட்டத்தின் 10.4 ஓவரில் ரேணுகா சிங் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பேட்டர் ஆலியா அலீன் அடித்த பந்தை மிட் ஆன் திசையில் நின்ற கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பறந்தவாறு ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தினர். ஹர்மன்ப்ரீத் கேட்ச் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த கேட்ச்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

மந்தனா சாதனை

இந்த போட்டியில் 91 ரன்கள் அடித்திருக்கும் ஸ்மிருதி மந்தனா, 2024ஆம் ஆண்டில் அதிக ரன்கள் அடித்த மகளிர் கிரிக்கெட் பேட்டர் என்ற சாதனை புரிந்துள்ளார். தற்போது வரை இவர் இந்த ஆண்டில் மட்டும் 1602 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இருக்கும் தென் ஆப்பரிக்கா பேட்டர் லாரா வோல்வார்ட் 1593 ரன்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே ஸ்மிருதி மந்தனா 2018ஆம் ஆண்டில் 1291, 2022ஆம் ஆண்டில் 1290 ரன்கள் அடித்த ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த பேட்டர் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தார்.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி