உலக சாதனை புரிந்த பெண் சிங்கம்.. 5 சிக்ஸர்கள், அசுர ஆட்டம் ஆடிய ரிச்சா கோஷ்! மகளிர் கிரிக்கெட்டில் படைக்கப்பட்ட வரலாறு
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டரான ரிச்சா கோஷ் புதியதொரு உலக சாதனை படைத்துள்ளார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த ரிச்சா கோஷ், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்தார். அத்துடன் சிக்ஸர் மூலம் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்
- இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டரான ரிச்சா கோஷ் புதியதொரு உலக சாதனை படைத்துள்ளார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த ரிச்சா கோஷ், சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்தார். அத்துடன் சிக்ஸர் மூலம் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்
(1 / 6)
ரிச்சா கோஷ் 18 பந்துகளில் அரை சதம் அடித்து வரலாறு படைத்தார். இதன் மூலம் மகளிர் டி20 சர்வதேச போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த பேட்டர் என்ற மைல்கல் சாதனை புரிந்தார். இந்த லிஸ்டில் நியூசிலாந்தின் சோஃபி டிவைன் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோரும் உள்ளனர்
(2 / 6)
ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணியில் அதிவேக அரைசதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையையும் ரிச்சா வசம்தான் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக குயின்ஸ்லாந்தில் நடந்த போட்டியில் 22 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்
(3 / 6)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நவி மும்பையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டம் விளையாடி நிலையில், 21 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது(PTI)
(4 / 6)
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஸ்கோர் 14.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது களமிறங்கிய ரிச்சா அபாரமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். அவர் 21 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில், 5 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்தார். ஸ்ட்ரைக் ரேட் 257.14 ஆக இருந்தது. 19.5 ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்
(5 / 6)
இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்மிருதி 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். ஜெமிமா 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். ராகவ் பிஸ்தா 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்
மற்ற கேலரிக்கள்