தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind W Vs Sa W: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்! மொத்தம் நான்கு சதங்கள் - தொடரை வென்ற இந்தியா மகளிர்

IND W vs SA W: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்! மொத்தம் நான்கு சதங்கள் - தொடரை வென்ற இந்தியா மகளிர்

Jun 19, 2024, 11:25 PM IST

google News
மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி 171 ரன்கள் சேர்த்தனர். இந்தியா மகளிர் - தென் ஆப்பரிக்கா மகளிர் இடையிலான இந்த போட்டியில் மொத்தம் நான்கு சதங்கள் விளாசப்பட்டன. அத்துடன் இரண்டு வெற்றிகளுடம் தொடரை வென்றது இந்தியா மகளிர். (BCCIWomen - X)
மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி 171 ரன்கள் சேர்த்தனர். இந்தியா மகளிர் - தென் ஆப்பரிக்கா மகளிர் இடையிலான இந்த போட்டியில் மொத்தம் நான்கு சதங்கள் விளாசப்பட்டன. அத்துடன் இரண்டு வெற்றிகளுடம் தொடரை வென்றது இந்தியா மகளிர்.

மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி 171 ரன்கள் சேர்த்தனர். இந்தியா மகளிர் - தென் ஆப்பரிக்கா மகளிர் இடையிலான இந்த போட்டியில் மொத்தம் நான்கு சதங்கள் விளாசப்பட்டன. அத்துடன் இரண்டு வெற்றிகளுடம் தொடரை வென்றது இந்தியா மகளிர்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் தென் ஆப்பரிக்கா மகளிர் அணி, இந்திய மகளிர் அணிக்கு எதிராக ஒரு நாள், டெஸ்ட், டி20 என மூன்று வகை போட்டிகளில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து இந்தியா மகளிர் - தென் ஆப்பரிக்கா மகளிர் மோதிக்கொண்ட இரண்டாவது ஒரு நாள் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்தியா அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பரிக்கா மகளிர் கேப்டன் லாரா வோல்வார்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஓபனர் ஸ்மிருத்தி மந்தனா 136, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 103 ரன்கள் அடித்தனர்.

தென் ஆப்பரிக்கா மகளிர் அணி இந்தியா மகளிருக்கு எதிராக 7 பவுலர்களை பயன்படுத்தியது.

தென் ஆப்பரிக்கா சேஸிங்

326 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் அடித்தது. இதனால் இந்தியா மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

தென் ஆப்பரிக்கா மகளிர் அணி ஓபனரும், கேப்டனுமான லாரா வோல்வார்ட் 135, மரிசான் கேப் 114 ரன்கள் அடித்தனர்.

இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி மற்றும் தென் ஆப்பரிக்கா மகளிர் அணிகளில் தலா இருவர் என மொத்தம் நான்கு சதங்கள் அடிக்கப்பட்டன.

கடைசி ஓவர் த்ரில்லர்

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பவுலிங் செய்த பூஜா வஸ்த்ராகர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அந்த ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் வெற்றி இந்திய மகளிர் அணி வசமானது.

மந்தனா - ஹர்மன்ப்ரீத் பார்ட்னர்ஷிப்

இந்தியா மகளிர் 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தபோது களத்தில் இருந்த மந்தனாவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க தொடங்கினார் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர். இருவரும் இணைந்து நிதானமும், அதிரடியும் கலந்து விளையாடினர். 

இதனால் இவர்கள் தங்களது சதத்தை பூர்த்தி செய்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 171 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ஹர்மன்ப்ரீத் கெளர் 88 பந்துகளில் 103 எடுத்தார். இது இவரது 6வது சதமாகும். தனது இன்னிங்ஸில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்திருந்தார். 

மந்தனா சாதனை

தென் ஆப்பரிக்கா மகளிர் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதமடித்து இருந்தார் மந்தனா. இதன் பின்னர் இந்த போட்டியில் சதமடித்து அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய மகளிர் அணி வீராங்கனை என்ற சாதனை புரிந்தார். அதுமட்டுமில்லாமல் இதை செய்த முதல் ஆசிய பேட்டர் என்ற பெருமையும் பெற்றார். 

120 பந்துகளில் 136 ரன்கள் அடித்து அவுட்டான மந்தனா, 18 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இது மந்தனாவின் 7வது சதமாகும். இதன் மூலம் இந்தியா மகளிர் வீராங்கனைகளில் அதிக சதமடித்த மிதாலி ராஜ் உடன் இணைந்துள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை பெங்களுருவில் நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி