Ind vs Ban Result: நினைத்ததை கெத்தாய் முடித்த ரோகித்.. தொடரை 2-0 என கைப்பற்றிய இந்தியா, சரணடைந்த வங்கதேசம்
Oct 01, 2024, 02:15 PM IST
India vs Bangladesh 2nd Test: செவ்வாய்க்கிழமை கிரீன் பார்க்கில் நடந்த இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டின் ஐந்தாவது நாளில் இந்தியா பங்களாதேஷை மொத்தம் 146 ரன்களுக்கு சுருட்ட உதவுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் 5-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இலக்கை எட்டி ஜெயித்தது. ஜெய்ஸ்வால் அரை சதம் பதிவு செய்து அசத்தினார். ரோகித் 8 ரன்னிலும், கில் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் அடுத்து வந்த கோலி, பண்ட் நிதானம் காட்டி இலக்கை அடைந்தனர். இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐந்தாம் நாள் மதிய உணவு இடைவேளையின் போது, பங்களாதேஷ் அணி மீதமுள்ள இரண்டு செஷன்களில் சேஸிங் செய்ய வெறும் 95 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
கோலி 29 ரன்களும், பண்ட் 4 ரன்களும் விளாசினர்.
ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோர் நான்காம் நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வங்கதேசத்துக்கு சரிவை உண்டாக்கினர், கடைசி ஏழு விக்கெட்டுகளை வெறும் 126 ரன்களுக்கு எடுத்தனர், பேட்ஸ்மேன்கள் டி20 போட்டியைப் போல், டெஸ்ட் வரலாற்றில் அதிவேக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை எடுத்தனர். 45 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, அஸ்வின் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, வங்கதேசம் 26/2 என்று இருந்தது. இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்கு முன் எஞ்சியிருந்த 8 விக்கெட்டுகளையும் காலி செய்தது இந்தியா.
வங்கதேசம் சுருண்டது
வங்கதேசம் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு சுருண்டது. ஜடேஜா, அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை காலி செய்து அணிக்கு உதவினர். ஆகாஷ் தீப் 1 விக்கெட்டை எடுத்தார்.
இந்தியா 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அதிகபட்சமாக வங்கதேசம் சார்பில் இஸ்லாம், அரை சதம் விளாசினார். முஷ்ஃபிகுர் ரஹிம் 37 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
ஜடேஜா சாதனை
முன்னதாக, பங்களாதேஷுக்கு எதிராக கான்பூரில் நடந்துவரும் டெஸ்ட் மத்தியில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களைப் பற்றியது மட்டுமல்ல, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பங்களாதேஷின் முதல் இன்னிங்ஸில் தனது ஒற்றை விக்கெட்டுடன் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கினார். அதன்மூலம் இந்த மேட்ச் பந்துவீச்சாளர்களுக்குமானது. திங்களன்று அவர் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் டெஸ்ட் சாதனையையும் முறியடித்தார்.
கான்பூரில் நடைபெற்ற இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டினார். இந்தியாவுக்கு எதிரான வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸின் போது, ஜடேஜா தனது 9.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் 28 ரன்களையும் பரிசளித்தார். 75-வது ஓவரில் காலித் அகமதுவை 4 பந்துகளில் டக் அவுட்டாக்கினார்.
35 வயதான அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பிறகு 300 வது விக்கெட்டை விரைவாக எட்டிய இரண்டாவது பந்துவீச்சாளர் ஆனார்.
டாபிக்ஸ்