Ajith Kumar: புதிய ரேஸ் அணி..இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு! டெஸ்ட் ட்ரைவிங் - ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க்கும் அஜித்-ajith kumar begins racing team aiming aim to help talented young drivers by providing fully support racing program - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: புதிய ரேஸ் அணி..இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு! டெஸ்ட் ட்ரைவிங் - ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க்கும் அஜித்

Ajith Kumar: புதிய ரேஸ் அணி..இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு! டெஸ்ட் ட்ரைவிங் - ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க்கும் அஜித்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 28, 2024 11:55 AM IST

Ajith Kumar: இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக புதிய ரேஸ் அணியை தொடங்கியுள்ளார் அஜித்குமார். ரேஸ் கார் டெஸ்ட் ட்ரைவிங் என ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க தொடங்கியுளளார் அஜித்குமார்.

Ajith Kumar: புதிய ரேஸ் அணி..இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு! டெஸ்ட் ட்ரைவிங் - ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க்கும் அஜித்
Ajith Kumar: புதிய ரேஸ் அணி..இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பு! டெஸ்ட் ட்ரைவிங் - ரேஸ் களத்தில் பரபரப்பாக இயங்க்கும் அஜித்

இதன் பின்னர் ஓராண்டுக்கும் மேலாக அவரது படம் வெளியாகாத நிலையில் இந்த படங்கள் மீது மிகுந்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே அஜித், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கு விருப்பமான செயல்களில் ஒன்றான ரேசில் மீண்டும் களம் இறக்க போவதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஸ் அணியை தொடங்கிய அஜித்

கடந்த சில நாள்களாக அஜித், கார் ரேஸ் பக்கம் திரும்ப இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி அவர், தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா சார்பில் 2024ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

இதையடுத்து மற்றொரு சர்ப்ரைஸ் அளிக்கும் விஷயமாக புதிய கார் அணியை அவர் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், "கார் பந்தய அணியின் உரிமையாளர் என்பதை கடந்து, கார் ரேசிங்கிக்கும் திரும்பியுள்ளார் அஜித்குமார்.

சர்வதேச அரங்கில் எஃப்ஐஏ சாம்பியன்ஷிப்பில் கார் பந்தயத்தில் ஈடுபடும் மிகச் சில இந்தியர்களில் அஜித்தும் ஒருவராக திகழ்கிறார். அவர் 2004 ஃபார்முலா ஆசியா BMW F3 சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார் மேலும் அவர் 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்.

அஜித்தின் புதிய ரேசிங் அணி பல்வேறு சர்வதேச பந்தயத் தொடர்களில் ஈடுபடும். அதன்படி @24hseries, @porsche ஐரோப்பிய சீரிஸ், 992 GT3 cup பிரிவிலும் பங்கேற்கும். திறமையான இளம் ரேஸர்களுக்கு வாய்ப்பும், முழு ஆதரவு அளிக்கும் பந்தயத் திட்டத்தை வழங்குவதை மிகப்பெரிய நோக்கமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

ரேஸ் கார்களை டெஸ்ட் செய்த அஜித்

ஐரோப்பா ரேசிங் சீசனில் பங்கேற்பதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புகழ் பெற்ற துபாய் ஆட்டோட்ரோம் ரேஸ் டிராக்கில் பெராரி 488 EVO ரேஸ் கார்களில் டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளார் அஜித். இந்த ரேசில் தான் ஓட்ட இருக்கும் கார், ஹெல்மெட் போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளார்.

அஜித் தனது கேராஜ்ஜில் இருந்தவாறு எடுத்துக்கொண்ட செஃல்பி விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதில் அஜித் பின்னணியில் ரேஸ் கார் சம்மநதப்பட்ட அத்துனை விஷயங்களும் இருந்தன.

அஜித்தின் புதிய படம்

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விடா முயற்சி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

அதேபோல் அஜித் நடித்து வரும் மற்றொரு படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த படத்திலும் த்ரிஷா தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.