Team India Practice: புளோரிடாவில் தொடர் மழை! கோலிக்கு தலைவலி, நாடு திரும்பும் இரண்டு இந்திய வீரர்கள் - ஏன் தெரியுமா?
Jun 14, 2024, 01:50 PM IST
புளோரிடாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்திய அணியின் வலைப்பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடைய இந்திய வீரர்கள் இருவர் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தனகு குரூப்பில் முதல் இடத்தில் இருப்பதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் நியூயார்க் மைதானத்தில் விளையாடிய நிலையில், கனடா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் புளோரிடாவில் இருக்கும் லாண்டர்கில் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
புளோரிடாவில் தொடர் மழை
இதையடுத்து கடந்த இரு நாள்களுக்கு முன்னரே இந்திய அணி புளோரிடா வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி இன்று வலைப்பயிற்சி மேற்கொள்வதாக இருந்தது. ஆனால் புளோரிடாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்திய அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, குரூப் டி பிரிவில் நேபாளம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி புளோரிடாவில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது அமைந்திருந்த நிலையில், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
கோலிக்கு தலைவலி
இந்தியா - கனடா அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் வலைப்பயிற்சி ரத்தாகி இருப்பது இந்திய ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு தலைவலியாக அமைந்திருக்கும் என்று கூறலாம்.
இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் கோலி மொத்தமாகவே 5 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு போட்டியில் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார். இந்த சூழ்நிலையில் அவரது பேட்டிங் பார்ம் கவலை அளிக்கும் விதமாக இருந்த நிலையில், புளோரிடா போட்டிக்கு முன்பு அவருக்கு வலைப்பயிற்சியானது மிகவும் முக்கிமான விஷயமாக கருதப்பட்டது.
அவர் தனது பார்மை மீட்டெடுக்கும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவின் பேட்டிங் வரிசை வலிமை பெறும். ஆனால் போட்டிக்கு முந்தைய நாளில் மழையால் பயிற்சியானது தடைபட்டிருப்பது சிக்கலை உருவாக்கியுள்ளது.
நாடு திரும்பும் இரண்டு வீரர்கள்
அதேபோல் இந்திய அணியுடன் ரிசர்வ் வீரர்களாக அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் பயனப்பட்டு வந்த ஓபனரான சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் ஆகியோர் நாடு திரும்ப உள்ளனராம்.
தற்போது இந்திய அணியின் ஓபனராக விராட் கோலி விளையாடி வரும் நிலையில், மற்றொரு ஓபனராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் கூடுதல் ஓபனர் தேவைப்படாது என்பதால் கில் நாடு திரும்ப இருக்கிறார்.
அதேபோல் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பொறுத்தவரை இந்திய அணி நன்கு செட்டாகி இருப்பதோடு, ஸ்பின் பவுலிங்கை அதிகம் நம்பி இருப்பதால் ஆவேஷ் கானுக்கும் வேலை இருக்காது என்பதால் அவரும் நாடு திரும்புகிறார்.
இருப்பினும் ஆல்ரவுண்டர் ரிங்கு சிங், இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் தொடர்ந்து ரிசர்வ் வீரர்களாக இந்திய அணியுடன் பயனப்பட உள்ளனராம்.
திடீரென வீரர்கள் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாற்று வீரராக இவர் அணியில் இணைவார்கள் எனவும் கூறப்படுகிறது.
அடுத்து மூன்று நாள்கள் முக்கிய போட்டிகள்
இனி வரும் மூன்று நாள்களில் நடைபெறும் போட்டிகளில் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கு ஒவ்வொரு குரூப்பை சேர்ந்த அணிகளுக்கும் இடையே பரபரப்பான மோதல் மிக்க போட்டியாக அமைய இருக்கிறது. இந்த சூழ்நிலையில் புளோரிடாவில் பெய்து வரை மழை போட்டி முடிவுகளிலும், புள்ளிப்பட்டியலிலும் பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தலாம் எனவும் தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்