தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Pak Result: பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! கடைசி ஓவர் திக் திக்..சாதனை வெற்றியுடன் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

IND vs Pak Result: பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! கடைசி ஓவர் திக் திக்..சாதனை வெற்றியுடன் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

Jun 12, 2024, 05:49 PM IST

google News
குறைவான இலக்கை விரட்டிய பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் இந்திய பவுலர்கள் தரமான கம்பேக் கொடுக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தனர். இறுதியில் இந்தியா சாதனை வெற்றியுடன் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. (PTI)
குறைவான இலக்கை விரட்டிய பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் இந்திய பவுலர்கள் தரமான கம்பேக் கொடுக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தனர். இறுதியில் இந்தியா சாதனை வெற்றியுடன் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

குறைவான இலக்கை விரட்டிய பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் இந்திய பவுலர்கள் தரமான கம்பேக் கொடுக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தனர். இறுதியில் இந்தியா சாதனை வெற்றியுடன் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 19வது போட்டி குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்றது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டி மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இந்த போட்டி தொடங்கும் முன்னர், இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று தனது குரூப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இந்தியா சொதப்பல் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 18.5 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42, அக்‌ஷர் படேல் 20 ரன்கள் அடித்தனர்.

பாகிஸ்தான் பவுலர்களில் நசீம் ஷா, ஹரிஸ் ராஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷாகின் அப்ரிடி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பாகிஸ்தான் சேஸிங்

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பெரும்பாலான போட்டிகள் லோ ஸ்கோர் த்ரில்லராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் 120 ரன்கள் என்ற குறைவான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31, இமாத் வாசிம் 15 ரன்கள் அடித்தனர். இந்திய பவுலர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா 3, ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அர்ஷ்தீப் சிங், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் 2 போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.  பாகிஸ்தான் அணி விளையாடியிருக்கும் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அத்துடன் அந்த அணி எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

சாதனை வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரில் இந்தியா பெற்றிருக்கும் இந்த வெற்றி சாதனையாக அமைந்துள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிகளில் குறைவான ஸ்கோர் அடித்து எதிரணியை கட்டுப்படுத்திய அணி என்ற சாதனையை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துள்ளார்.

இதற்கு முன்னர் 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 119 ரன்கள் எடுத்து, நியூசிலாந்து அணியை சேஸ் செய்ய விடாமல் கட்டுப்படுத்தியது.

அதேபோல்  பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை போட்டியில் 7வது வெற்றியை பெற்றிக்கும் இந்தியா, ஒரு அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையும் புரிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி