தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sl 2nd T20: மழை குறுக்கீடு, டிஎல்எஸ் விதிமுறைப்படி மாற்றப்பட்ட இலக்கு! அதிரடியில் மிரட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்

Ind vs SL 2nd T20: மழை குறுக்கீடு, டிஎல்எஸ் விதிமுறைப்படி மாற்றப்பட்ட இலக்கு! அதிரடியில் மிரட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்

Jul 28, 2024, 11:41 PM IST

google News
போட்டி தொடங்குவதற்கு முன்னரும், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பின்னரும் மழை குறுக்கீடு இருந்த நிலையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி மாற்றப்பட்ட இலக்கை அதிரடியில் மிரட்டி இந்திய பேட்ஸ்மேன்கள் சேஸ் செய்தனர். இரண்டு தொடர் வெற்றிகளுடன் தொடரையும் இந்தியா வென்றுள்ளது. (PTI)
போட்டி தொடங்குவதற்கு முன்னரும், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பின்னரும் மழை குறுக்கீடு இருந்த நிலையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி மாற்றப்பட்ட இலக்கை அதிரடியில் மிரட்டி இந்திய பேட்ஸ்மேன்கள் சேஸ் செய்தனர். இரண்டு தொடர் வெற்றிகளுடன் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன்னரும், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய பின்னரும் மழை குறுக்கீடு இருந்த நிலையில் டிஎல்எஸ் விதிமுறைப்படி மாற்றப்பட்ட இலக்கை அதிரடியில் மிரட்டி இந்திய பேட்ஸ்மேன்கள் சேஸ் செய்தனர். இரண்டு தொடர் வெற்றிகளுடன் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வரும் நிலையில், முதல் போட்டியில் இந்தியா 43 ரன்கள் வித்தியாச்சத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 1-0 என்ற கணக்கில் தொடரில் இந்தியா முன்னிலை வகித்தது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில் கழுத்தில் லேசான அசெளகரியம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். மழை காரணமாக போட்டியானது 45 நிமிடங்கள் கழித்து தொடங்கியது.

பவுலிங்கில் கலக்கிய இந்தியா

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக குசால் பெராரே 53, பதும் நிசாங்கா 32, கமிந்து மெண்டிஸ் 26 ரன்கள் எடுத்தனர்.

இந்திய பவுலர்களில் ஆரம்பத்தில் ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், பின்னர் கடைசி கட்டத்தில் துல்லிமாக பவுலிங் செய்து இலங்கை ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். இந்திய பவுலர்களில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மழை குறுக்கீடு

இதைத்தொடர்ந்து 162 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய இந்திய இன்னிங்ஸில் ஆட்டத்தில் மூன்றாவது பந்திலேயே மழை குறுக்கீடு ஏற்பட்டது. அப்போது அணியின் ஸ்கோர் விக்கெட் இழப்பின்றி 6 என இருந்தது. இதன் பின்னர் சுமார் ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பிறகு போட்டியானது மீண்டும் தொடங்கியது

டிஎல்எஸ் விதிப்படி இலக்கில் மாற்றம்

இந்திய அணியின் வெற்றி இலக்கை டிஎல்எஸ் விதிப்படி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி 8 ஓவரில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என புதிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா 6.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

இந்திய பேட்ஸ்மேன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30, சூர்யகுமார் யாதவ் 26, ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் அடித்தனர். கில்லுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறி ஏமாற்றம் தந்தார்.

இந்திய பவுலிங்கில் வெறும் 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி பல்லேகலேவில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி