தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Ire Live Score: இந்தியாவின் துல்லிய பந்து வீச்சில் சரிந்த அயர்லாந்து! பும்ராவை பின்னுக்கு தள்ளிய ஹர்திக் சாதனை

Ind vs Ire Live Score: இந்தியாவின் துல்லிய பந்து வீச்சில் சரிந்த அயர்லாந்து! பும்ராவை பின்னுக்கு தள்ளிய ஹர்திக் சாதனை

Jun 05, 2024, 11:30 PM IST

google News
இந்தியாவின் துல்லிய பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் அயர்லாந்து அணி 100 ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆல்அவுட்டாகியுள்ளது. பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார்.
இந்தியாவின் துல்லிய பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் அயர்லாந்து அணி 100 ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆல்அவுட்டாகியுள்ளது. பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார்.

இந்தியாவின் துல்லிய பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் அயர்லாந்து அணி 100 ரன்கள் கூட எட்ட முடியாமல் ஆல்அவுட்டாகியுள்ளது. பும்ராவை பின்னுக்கு தள்ளி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருக்கும் இரு அணிகளும், இந்த உலகக் கோப்பை தொடரில் தங்களது முதல் போட்டியில் களமிறங்குகின்றன.

இந்திய அணி கடைசியாக விளையாடி 5 டி20 போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. அயர்லாந்து அணி தனது கடைசி 5 டி20 போட்டியில் 3 வெற்றிகளை பெற்றிருக்கிறது.

இந்த போட்டியில் சுமார் 18 மாதங்களுக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் ஹார்திக் பாண்ட்யாவை சேர்ந்து நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது.

இந்தியா பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த அயர்லாந்து ஓவரில் ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கரேத் டெலானி 26, ஜோஷ் லிட்டில் 14, கர்டிஸ் காம்பர் 12, லார்கன் டக்கர் 10 ரன்கள் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

அடுத்தடுத்து அவுட்டான அயர்லாந்து பேட்ஸ்மேன்கள்

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய பவுலர்களில் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. அயர்லாந்து பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் துல்லியமாக பவுலிங் செய்தனர். ரன் அடிக்க முயற்சித்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் , ஐஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

கரேத் டெலானி - ஜோஷ் லிட்டில் பார்டனர்ஷிப்

50 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து அயர்லாந்து அணி தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த கரேத் டெலானி - ஜோஷ் லிட்டில் ஆகியோர் அணியை மீட்கும் விதமாக பார்டனர்ஷிப் அமைத்தனர். நீண்ட நேரம் இவர்களின் பார்ட்னர்ஷிப் நீடிக்கவில்லை என்றாலும், 27 ரன்கள் சேர்த்தனர். ஜோஷ் லிட்டில் 13 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட கரேத் டெலானி 26 ரன்கள் எடுத்த நிலையில் துர்தஷ்டவசமாக ரன் அவுட்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதற்கு முன்னர் அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 70 ரன்களில் ஆல்அவுட்டானது. இதுவே அந்த அணியின் மோசமான ஸ்கோராக அமைந்திருந்தது. இன்றைய போட்டியில் 70 ரன்களுக்கு ஆல்அவுட்டாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து தப்பித்தது.

பாண்ட்யா சாதனை

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக ஸ்பின்னர் யஸ்வேந்திர சஹால் 96 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் 75 விக்கெட்டுகளுடன் ஜஸ்ப்ரீத் பும்ரா இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி 76 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் பாண்ட்யா.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி