Gautam Gambhir: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர்! கம்பீர் டிக் அடித்த தென் ஆப்பரிக்கா வீரர் - பிசிசிஐ முடிவு என்ன?
Jul 13, 2024, 06:05 PM IST
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென் ஆப்பரிக்கா வீரரை டிக் செய்துள்ளார் கெளதம் கம்பீர். ஐபிஎல் போட்டிகளில் இருந்து தொடர்ந்து வரும் நட்பு காரணமாக தென் ஆப்பரிக்கா வீரரை தன்னுடன் இணைந்து பணியாற்றும் விதமாக பிசிசிஐக்கு கம்பீர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை நியமிக்க வேண்டும் என்று தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் தேர்வு
இந்திய அணி பவுலிங் பயிற்சியாளர்களுக்கான பெயர்களில் முன்னாள் வீரர்கள் வினய் குமார் மற்றும் ஜாகீர் கான் ஆகியோருக்குப் அடுத்தபடியாக தற்போது மோர்கல் பெயர் அடிபட தொடங்கியுள்ளது.
வினய் குமாரை அணியில் சேர்ப்பதில் பிசிசிஐ பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஜாகீர் குறித்து விவாதங்கள் நடந்தாத ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து தற்போது கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் மீது தனது ஆர்வத்தைக் காட்டியுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர்.
இன்னும் இரு வாரங்களில் இறுதி முடிவு
தற்போது ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் மோர்கலுடன் பிசிசிஐ ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் குறித்து இறுதி முடிவு எடுக்க சிறிது நேரம் ஆகலாம் என்றே கூறப்படுகிறது.
அடுத்த வாரத்துக்குள் இந்திய அணியின் அடுத்த பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களை பிசிசிஐ இறுதி செய்யத் தவறினால், ஜூலை26ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தொடங்க இருக்கும் டி20 தொடருக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையிலான என்சிஏ ஆதரவு ஊழியர்களுடன் கம்பீர் தனது பயிற்சியாள பயணத்தை தொடங்க நேரிடும்.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோரின் பதவிக்காலமும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. இருப்பினும், திலீப்புக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கலாம்.
கம்பீர் - மோர்க்கல் இடையிலான உறவு
மோர்கல் மற்றும் கம்பீர் இடையிலான உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில், தான் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர்களில் மோர்க்கலும் ஒருவர் என்று கம்பீர் பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே, ஐபிஎல் தொடரில் கம்பீர் கேப்டனாக இருந்தபோது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மோர்கலை ஏலம் எடுத்து களமிறக்கினார். மோர்னே மோர்கல் 2014 முதல் 2016 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதில் 2014 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
தென் ஆப்பரிக்க அணியின் ஸ்டிரைக் பவுலர்
கடந்த 2006இல் தென் ஆப்பரிக்கா அணியில் பவுலராக களமிறங்கிய மோர்னே மோர்கல், 2018 வரை விளையாடினார்.
86 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் தென் ஆப்பரிக்காவுக்காக விளையாடிய மோர்கல் மொத்தம் 544 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கம்பீர் நெருக்கமாக இருக்கும் வீரர்களில் ஒருவராக இருக்கும் மோர்கல்,ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக இருந்தபோதும், அந்த அணி பவுலிங் பயிற்சியாளராக அவர் நியமித்தார்.
மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்வதற்கு முன்பு மோர்கலுடன் இரண்டு சீசன்கள் பணியாற்றினர். தற்போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பயிற்சியாளராக இருக்கும் ஜஸ்டின் லாங்கருடன். மோர்னே மோர்கல் பணியாற்றி வருகிறார்.
மோர்கலை நியமிப்பதில் சிக்கல்
மோர்கலை அணியின் பயிற்சியாளராக நியமிப்பதில் சில தடைகள் உள்ளன. . வெளிநாட்டு ஆதரவு ஊழியர்களை பணியமர்த்துவதில் பிசிசிஐ அதிக ஆர்வம் காட்டவில்லை. ரவி
சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் பதவிக்காலத்தில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் இல்லை. ஜான்டி ரோட்ஸை பீல்டிங் பயிற்சியாளராக வாரியம் நிராகரித்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இருப்பினும் கம்பீரின் கோரிக்கையை ஏற்று பிசிசிஐ தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்