தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Ashish Nehra: 140 கிமீ வேகத்தில் பந்து வீசும் புயலாக இருந்தவர்! இந்திய அணியின் மேட்ச் வின்னர் ஆஷிஷ் நெக்ரா பர்த்டே

HBD Ashish Nehra: 140 கிமீ வேகத்தில் பந்து வீசும் புயலாக இருந்தவர்! இந்திய அணியின் மேட்ச் வின்னர் ஆஷிஷ் நெக்ரா பர்த்டே

Apr 29, 2024, 07:00 AM IST

google News
இந்திய அணியில் இடம்பிடித்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் வேகம், துல்லியம், லைன் மற்றும் லென்தில் வேரிஷன் காட்டுவது என தந்திரம் மிக்க பவுலராக இருந்து வந்துள்ளார் ஆஷிஷ் நெக்ரா. இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முக்கிய பவுலராகவும் இருந்ததோடு, பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாகவும் இருந்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் வேகம், துல்லியம், லைன் மற்றும் லென்தில் வேரிஷன் காட்டுவது என தந்திரம் மிக்க பவுலராக இருந்து வந்துள்ளார் ஆஷிஷ் நெக்ரா. இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முக்கிய பவுலராகவும் இருந்ததோடு, பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாகவும் இருந்துள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் வேகம், துல்லியம், லைன் மற்றும் லென்தில் வேரிஷன் காட்டுவது என தந்திரம் மிக்க பவுலராக இருந்து வந்துள்ளார் ஆஷிஷ் நெக்ரா. இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முக்கிய பவுலராகவும் இருந்ததோடு, பல போட்டிகளில் வெற்றி பெற காரணமாகவும் இருந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடிய ஸ்டிரைக் பவுலராக இருப்பவர்க ஆஷிஷ் நெக்ரா. மேட்ச் வின் பவுலராக இருந்து வந்த இவர் 2002இல் இந்தியா வென்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அணியிலும், 2011இல் இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

சேவாக்குடன ரஞ்சி போட்டியில் ஆட்டம்

ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெக்ரா, இந்திய அணியின் முன்னாள் ஓபனர் வீரேந்தர் சேவாக்குடன் இணைந்து விளையாடியுள்ளார். இவரும் சேவாக்கும், ஒரே பைக்கில் சென்று டெல்லியில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்கள்.

டெஸ்டில் அறிமுகம்

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட நெக்ராவுக்கு 1999இல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காகக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது 18 ஆண்டுகள் கிரிக்கெட் கேரியரில் மொத்தம் 5 ஆண்டுகள் தான் நெக்ரா டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக அவர் 2004இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

காயம், பிட்னஸ் போன்ற காரணங்கள் டெஸ்ட் போட்டியில் இருந்துஅவரை விலக்கி வைக்க காரணமாக இருந்தது. இருப்பினும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார்.

2003 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வீழ்த்திய நெக்ரா, உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர்கள் என்ற சாதனை புரிந்தார்.

20 ஆண்டு காலம் வரை இவரது இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் முகமது ஷமி அதை முறியடித்தார்.

நெக்ராவின் கிரிக்கெட் கேரியரில் காயங்iகள் அவருக்கு மிக பெரிய தொல்லையாக அமைந்தது. இதனால் அணிக்கு வருவதும் போவதுமாக இருந்தார். கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னை நிருபிக்கும் சிறந்த பவுலராகவே அவர் ஜொலித்துள்ளார்.

2001 முதல் 2011 வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் விளையாடி கடைசி ஒரு நாள் 2011 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய அரையிறுதி போட்டியாகும். அந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

ஐபிஎல் கேரியர்

2008இல் ஐபிஎல் தொடங்கியபோது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் 2009, 2010. 2013 சீசன்களில் டெல்லி அணிக்காகவும், 2011, 2012 சீசன்களில் புனே வாரியர்ஸ், 2014, 20215 சிஎஸ்கே, 2016, 2017 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடினார்.

ஐபிஎல் போட்டிகளில் இவரது செயல்பாட்டால் 2009இல் இந்தியா டி20 அணியில் அறிமுகமானார். 2017 வரை டி20 போட்டிகளில் மட்டும் விளையாடிய நெக்ரா பின்னர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஓய்வை பெற்றார்.

ஐபிஎல் கோப்பை வென்ற ஒரே இந்திய பயிற்சியாளர்

2018இல் ஆர்சிபி அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த நெக்ரா, பின்னர் 2022இல் குஜராத் டைட்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் ஆனார். அந்த அணி களமிறங்கிய முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை தட்டி தூக்கியது. இதற்கு முக்கிய காரணமாக நெக்ரா பின்னணியில் இருந்தார். அத்துடன் ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமை பயிற்சியாளர் என்ற பெருமையும் பெற்றார்.

இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் வேகம், துல்லியம், லைன் மற்றும் லென்தில் வேரிஷன் காட்டுவது என தந்திரம் மிக்க பவுலராக இருந்து வந்துள்ளார். மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலராகவும், சிறந்த மேட்ச் வின்னராகவும் இருந்து ஆஷிஷ் நெக்ராவுக்கு இன்று 45வது பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி