தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Dc Vs Csk Result: சிஎஸ்கே தோல்விதான்! ஆனாலும் தரிசனம் தந்த தோனி - Vintage ஆட்டத்தால் டெசிபிளில் அதிர்ந்த மைதானம்

DC vs CSK Result: சிஎஸ்கே தோல்விதான்! ஆனாலும் தரிசனம் தந்த தோனி - Vintage ஆட்டத்தால் டெசிபிளில் அதிர்ந்த மைதானம்

Apr 01, 2024, 01:13 AM IST

google News
ஆட்டத்தின் 16.2 ஓவரில் தோனி பேட் செய்ய வந்தது முதல், கடைசி பந்து வரை ரசிகர்களின் ஆர்பரிப்பு 120 டெசிபிளுக்கு மேல் சத்தத்துடன் எகிறியது. தனது ஸ்டைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார் தோனி. (AP)
ஆட்டத்தின் 16.2 ஓவரில் தோனி பேட் செய்ய வந்தது முதல், கடைசி பந்து வரை ரசிகர்களின் ஆர்பரிப்பு 120 டெசிபிளுக்கு மேல் சத்தத்துடன் எகிறியது. தனது ஸ்டைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார் தோனி.

ஆட்டத்தின் 16.2 ஓவரில் தோனி பேட் செய்ய வந்தது முதல், கடைசி பந்து வரை ரசிகர்களின் ஆர்பரிப்பு 120 டெசிபிளுக்கு மேல் சத்தத்துடன் எகிறியது. தனது ஸ்டைல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார் தோனி.

ஐபிஎல் தொடரின் 13வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே விசாகபட்டினம் ஒய்எஸ்ஆர் மைதானத்தில் நடைபெற்றது. விசாகபட்டினம் மைதானம் டெல்லி அணியின் இரண்டாவது உள்ளூர் மைதானமாக இந்த சீசனில் உள்ளது. அதன்படி டெல்லி அணி விளையாடும் முதல் உள்ளூர் போட்டியாகவும் இந்த போட்டி அமைந்தது.

முதல் இரண்டு போட்டிகளை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், வெளியூர் மைதானத்தில் முதல் போட்டியில் களமிறங்குகியது.

டெல்லி அதிரடி

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52, ரிஷப் பண்ட் 51, ப்ருத்வி ஷா 43 ரன்கள் எடுத்தனர். சிஎஸ்கே பவுலர்களில் மதிஷா பத்திரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா, முஸ்தபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சிஎஸ்கே சேஸிங்

மிக பெரிய இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ரன்கள் வித்தயாசத்தில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றது.

அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 45, எம்எஸ் தோனி 37, டேரில் மிட்செல் 34 ரவீந்திர ஜடேஜா 21 ரன்கள் எடுத்தனர்.

சிறப்பாக பவுலிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் பந்து வீச்சாளர்கள், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை ரன்குவிக்க விடாமல் தடுமாற செய்தனர்.

முகேஷ் குமார் 3, கலீல் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அக்சர் படேல் ஒரு விக்கெட்டை எடுத்தார். சிஎஸ்கேவுக்கு எதிராக பக்கா பிளானுடன் வந்த டெல்லி கேபிடல்ஸ் 7 பவுலர்ஸ்களை பயன்படுத்தியது.

சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் திணறல்

டெல்லி பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள திணறிய சிஎஸ்கே ஓபனர்கள் ருதுராஜ் கெய்வாட், ரச்சின் ரவீந்திரா அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது அற்புதமான லைன் மற்றும் வென்தில் பந்து வீசினார்.

ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அடுத்ததாக பேட் செய்ய வந்த ரஹானே - மிட்செல் விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து 68 ரன்கள் சேர்த்தனர்.

37 ரன்கள் எடுத்து மிட்செல் அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த ரஹானேவும் 45 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதே ஓவரில் இளம் பேட்ஸ்மே சமீர் ரிஸ்வியும் முதல் பந்திலேயே டக்அவுட்டானார்.

தேவைப்படும் ரன் ரேட் அதிகரிக்க களத்தில் இருந்த ஷிவம் டூபே, ஜடேஜா ஆகியோர் அடித்து ஆட முயற்சித்தனர். ஆனால் டெல்லி பவுலர்கள் பக்காவாக பந்து வீசி சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

தோனி ஸ்பெஷல்

ஷிவம் டூபே 18 ரன்னில் அவுட்டார், ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்த தல தோனி பேட் செய்ய க்ரீஸுக்கு வந்தார். எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் வேட்டையை தொடங்கினார்.

தனது ஸ்டைல் அதிரடி ஆட்டத்தை கையாண்ட அவர் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

சிஎஸ்கேவின் தோல்வி உறுதியாகிவிட்டபோதிலும் தோனனியின் அதிரடி கண்டு 120 டெசிபிள்களுக்கு மேல் ஆராவரத்துடன் ரசிகர்கள் ஆர்பரித்தனர்.

சிஎஸ்கே அணி ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்ட நிலையில், ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்த டெல்லி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி