தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ravindra Jadeja: உலக கோப்பை வெற்றி எதிரொலி! கோலி வழியில் ஜடேஜா!சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்!

Ravindra Jadeja: உலக கோப்பை வெற்றி எதிரொலி! கோலி வழியில் ஜடேஜா!சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்!

Kathiravan V HT Tamil

Jun 30, 2024, 11:44 PM IST

google News
Ravindra Jadeja: நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராத் கோலி ஓய்வை அறிவித்து இருந்தனர். (BCCI-X)
Ravindra Jadeja: நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராத் கோலி ஓய்வை அறிவித்து இருந்தனர்.

Ravindra Jadeja: நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராத் கோலி ஓய்வை அறிவித்து இருந்தனர்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா அறிவித்து உள்ளார். 

உலக கோப்பையை வென்ற இந்தியா

நேற்றைய தினம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று இருந்தது. இந்த போட்டிக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக விராத் கோலி ஓய்வை அறிவித்து இருந்தனர். 

ஜடேஜாவின் இஸ்டாகிராம் பதிவு

 இது தொடர்பாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கருத்து தெரிவித்து உள்ளார். அதில்,  "நன்றி நிறைந்த இதயத்துடன், டி 20 சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். பெருமையுடன் பாய்ந்து செல்லும் உறுதியான குதிரையைப் போல, நான் எப்போதும் எனது நாட்டிற்காக எனது சிறந்ததைக் கொடுத்துள்ளேன், மற்ற வகை கிரிக்கெட்டில் செயல்பாடுகள் தொடரும். டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவு கனவு நனவானது. இது எனது வாழ்கையின் உச்சம். நினைவுகள், உற்சாகங்கள் மற்றும் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி"  என பதிவிட்டு உள்ளார். 

இந்திய அணிக்கு ஜடேஜாவின் பங்களிப்பு

பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆல்ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா பங்களித்து உள்ளார். நடந்து முடிந்த சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி வெற்றியில் ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 

வெறும் 9 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்தார். போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும், ரன்களை கட்டுப்படுத்தி அணிக்கு வலு சேர்த்தார்.

74 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்

இதுவரை 74 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள ரவீந்திர ஜடேஜா, 41 இன்னிங்ஸ்களில் 515 ரன்கள் குவித்து உள்ளார்.  பெரும்பாலும் லோயர்-மிடில் ஆர்டர் வரிசையில் ஜடேஜாவின் பேட்டிங் இருந்து உள்ளது.  

மேலும் டி20 கிரிக்கெட் பந்து வீச்சை பொருத்த வரை 54 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்திய அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இருந்த ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற முடியாமல் போனது.  தோல்வி அடைந்தது.

ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் அணியில் அவரை அணியில் சேர்க்க அணி நிர்வாகம் விரும்புவதைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் டி20 போட்டிகளுக்கு ஜடேஜா திரும்பி  இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வரலாற்று வெற்றி 

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்கள் அடித்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா சேஸிங்

177 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.

தென் ஆப்பரிக்கா பேட்டிங்கில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 52, குவண்டின் டி காக் 39 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்களில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி