தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Csk Result: தெறிக்கவிட்ட பதிரனா! ரோகித் சதமடித்தும் தோல்வி - மும்பை கோட்டையில் கொடி நட்டிய சிஎஸ்கே

MI vs CSK Result: தெறிக்கவிட்ட பதிரனா! ரோகித் சதமடித்தும் தோல்வி - மும்பை கோட்டையில் கொடி நட்டிய சிஎஸ்கே

Apr 14, 2024, 11:26 PM IST

பவுலிங் செய்த ஒவ்வொரு ஓவர்களிலும் விக்கெட் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திய பதிரானா, மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததோடு, சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார். (PTI)
பவுலிங் செய்த ஒவ்வொரு ஓவர்களிலும் விக்கெட் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திய பதிரானா, மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததோடு, சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

பவுலிங் செய்த ஒவ்வொரு ஓவர்களிலும் விக்கெட் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திய பதிரானா, மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததோடு, சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

ஐபிஎல் 2024 தொடரின் 29வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றியுடன் மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5 போட்டிகளில் 2 வெற்றியுடன் 7வது இடத்திலும் உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

T20 World Cup Bangladesh team: டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு-கேப்டன் யார்?

Harbhajan Singh: பிசிசிஐக்கு சிறப்பு ஆலோசனை கூறிய இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்

DC vs LSG Preview: தனது கடைசி லீக் மேட்ச்சை வெற்றியுடன் முடிக்க காத்திருக்கும் டெல்லி.. கே.எல்.ராகுல் டீம் சவால் தருமா?

Andrew Symonds Memorial Day: ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் போர் வீரன்! ஸ்லீப்பர் செல் ஆட்டக்காரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஐபிஎல் தொடரின் எல்கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இரு எதிரி அணிகளின் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போட்டியாகவும் உள்ளது.

மும்பை அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக மதிஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ஷிவம் டூபே, ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா 21 ரன்கள் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலிங்கில் ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சிஎஸ்கே அணிக்காக 250வது போட்டியில் விளையாடிய தோனி, கடைசி ஓவரில் நான்கு பந்துகளை எதிர்கொண்டார். அதில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு வான்கடே மைதானத்தை அதிரவைத்தார். அவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் சேஸிங்

207 ரன்கள் இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்த சீசனில் முதல் வெளியூர் மைதான வெற்றியையும் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 

மும்பை அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 105, திலக் வர்மா 31, இஷான் கிஷன் 23 ரன்கள் எடுத்தனர்.  மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்காக ஒற்றை ஆளாக போராடிய ரோகித் ஷர்மா 61 பந்துகளில் சதமடித்தார். அவர் சதமடித்தும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. 

சிஎஸ்கே பவுலர்களில் மிதஷா பதிரனா4 விக்கெட்டுகளை வீழ்தினார். துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

தெறிக்கவிட்ட பதிரனா

சிஎஸ்கே பவுலர்கள் பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் பிதரனா தெறிக்கவிடும் விதமாக பவுலிங் செய்தார். அவர் வீசிய நான்காவது ஓவர் தவிர பவுலிங் செய்த மற்ற ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்த பதிரனா 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சிஎஸ்கே வெற்றிக்கு காரணமாக இருந்ததுடன், ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

அதிரடி தொடக்கம்

ரோகித் ஷர்மா - இஷான் கிஷன் இணைந்து அணிக்கு தேவைப்பட்ட அதிரடியான தொடக்கத்தை தந்தனர். மாறி மாறி பவுண்டரி சிக்ஸர்களை அடித்த இவர்கள் பவர்ப்ளேயில் 63 ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இஷான் கிஷன் 23 ரன்களில் பதிரனா வீசிய பந்தில் அவுட்டானார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் பவுண்டரி அருகே முஸ்தபிசுர் ரஹ்மான் பிடித்த அற்புத கேட்ச்சில் சிக்கி வெளியேறினார்.

பார்ட்னர்ஷிப் இல்லாமல் தவித்த மும்பை இந்தியன்ஸ்

ரோகித் ஷர்மா - திலக் வர்மா இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். திலக் வர்மா 31 ரன்களில் அவுட்டானார். அவர் அவுட்டான பின்னர் மும்பை அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் எதுவும் அமையவில்லை.

ஹர்திக் பாண்ட்யா 2, டிம் டேவிட் 13, ரோமரியோ ஷெப்பர்டு 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ரன் குவிப்பில் ஈடுபடாமல் ஏமாற்றம் அளித்தனர்.

ரோகித் சதம் வீண்

சிஎஸ்கேவை வீழ்த்த ரோகித் ஷர்மா மட்டும் ஒற்றை ஆளாக கடைசி வரை போராடினார். ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ரோகித் ஷர்மா 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளை அடித்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிக்காக ரோகித் ஷர்மா முதல் முறையாக சதமடித்தபோதிலும், அது அணிக்கு வெற்றியை தராமல் போனது துர்தஷ்டவசமான விஷயமாக அமைந்தது. அத்துடன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே 2008இல் நடைபெற்ற போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய சனத் ஜெய்சூர்யா சதமடித்தார். இதன் பின்னர் 16 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையே ரோகித் ஷர்மா சதமடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

IPL, 2024

Live

DC

199/4

19.2 Overs

VS

LSG

YTB

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி