தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு ரெடி! இன்ப அதிர்ச்சி தந்து பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா அதிரடி!

T20 World Cup: உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசு ரெடி! இன்ப அதிர்ச்சி தந்து பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா அதிரடி!

Kathiravan V HT Tamil

Jun 30, 2024, 11:44 PM IST

google News
T20 World Cup: இந்திய அணியின் சிறப்பான பங்களிப்புகாக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார். (ICC- X)
T20 World Cup: இந்திய அணியின் சிறப்பான பங்களிப்புகாக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.

T20 World Cup: இந்திய அணியின் சிறப்பான பங்களிப்புகாக 125 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவிப்பதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்து உள்ளது. 

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, ஷிவம் துபே 27 ரன்கள் அடித்தனர்.

தென் ஆப்பரிக்கா பவுலர்களில் கேசவ் மகராஜ், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

தென் ஆப்பரிக்கா சேஸிங்

177 ரன்கள் என்ற சவாலான இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதுடன், இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.

தென் ஆப்பரிக்கா பேட்டிங்கில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 52, குவண்டின் டி காக் 39 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்களில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

17 ஆண்டு கால கனவு

2007இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை முதல் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் பிறகு 17 ஆண்டு காலம் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக வென்றுள்ளது.

கடைசியாக 2013இல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு ஐசிசி கோப்பை என்பது இந்தியாவுக்கு 11 ஆண்டுகள் தண்ணி காட்டி வந்தது. இதையடுத்து தற்போது அந்த கோப்பையை தன் வசமாக்கியுள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்து உள்ள, பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா, ICC ஆடவர் T20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அயைணிக்கு 125 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பான விளையாட்டு திறனை வெளிப்படுத்தி உள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு உள்ளார். 

உலக கோப்பை வெற்றியை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர். 

இது குறித்து விராட் கோலி கூறியதாவது, "இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை. நாங்கள் இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். சில நாள்கள் நீங்கள் ரன் எடுக்க முடியாது என்று நினைக்கிறீர்கள். ஆனால் அதன் பிறகு எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.

அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம்

கடவுள் பெரியவர். அணிக்கு வேண்டிய வேலையை வேண்டிய நாளில் செய்து முடித்துள்ளேன். இப்போது அல்லது எப்போதும் இந்தியாவுக்கு நான் விளையாடிய கடைசி டி20 இதுதான். கோப்பையை கையில் உயர்த்தி பிடிக்க விரும்பினேன். கட்டாயப்படுத்தி கொள்வதை விட சூழ்நிலையை மதிக்க விரும்பினேன்.

இது ஒரு திறந்த ரகசியம், அடுத்த தலைமுறை பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது. சில அற்புதமான வீரர்கள் அணியை முன்னோக்கி அழைத்துச் சென்று கொடியை உயர்த்துவார்கள் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி